(இலக்கணம் மற்றும் மொழிப்பயிற்சி குறுவினாக்கள்)
1. பாரதியார்
கவிஞர், நூலகம்
சென்றார், அவர்
யார்? ஆகிய
தொடர்களில்
எழுவாயுடன் தொடரும் பயனிலைகள்
யாவை?
v பாரதியார்
கவிஞர் - எழுவாய், பெயர்ச்சொல் பயனிலை
v நூலகம்
சென்றார் - எழுவாய், வினைமுற்று பயனிலை
v அவர்
யார் - எழுவாய், வினா பயனிலை
2.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியக்
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடையை எடுத்து எழுதுக.
v கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் – இன்னிசை அளபெடை
3. ’எழுது
என்றாள்’ என்பது விரைவு காரணமாக ’எழுது எழுது என்றாள்’ என அடுக்கு தொடரானது.
’சிரித்துப் பேசினார்’
என்பது
எவ்வாறு அடுக்குத்தொடர் ஆகும்?
v சிரித்து
சிரித்துப் பேசினார்.
4.
வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும்
பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
v வேம்
+ கை = வேவுகின்ற கை – இது தொடர் மொழி.
(ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வருவது) (அல்லது)
வேங்கை பாய்ந்தது.
v வேங்கை
என்பது தனித்து நின்று மரத்தையும்,
v வேங்கை
என்னும் அதே சொல், வேம் + கை என்று பிரிந்து நின்று வேவுகின்ற கை என்ற
பொருளையும் தருகிறது. எனவே, அது பொதுமொழி.
v (அதாவது,
ஒரு
சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அதே சொல் பிரிவு பட்டு நின்று வேறொரு பொருளையும்
தந்து தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாக வருவது பொது மொழி ஆகும்.)
5.
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. - மேற்கண்ட
தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரில் உள்ள
பிழைக்கான காரணத்தை எழுதுக.
v ஒரு
தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன
என்பது சரி.
v ஒரு
சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்பதும் சரி.
ஆனால்,
v ஒரு
சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன என்பது
தவறு.
ஏனெனில்,
தாறில்தான்
சீப்பு இருக்கும். மாறாக சீப்பில் தாறு இருக்காது.
6.
’உடுப்பதூஉம் உண்பதூஉம்
காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்’
- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி
அதன் இலக்கணம் தருக.
v உடுப்பதூஉம்
உண்பதூஉம் என்னும் சொற்கள் இன்னிசை அளபெடை சொற்கள் ஆகும்.
7.
"சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே
தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்
- இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
v சீசர்
எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்கும்.
v புதியவர்களைப்
பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.
8.
வழுவமைதி என்றால் என்ன?
v இலக்கண
முறையின்றி பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
v இவ்வழுவை
ஏதேனும் ஒரு காரணம் கருதி ஏற்றுக் கொள்வது வழுவமைதி.
9.
வழுவமைதி எத்தனை வகைப்படும் அவை யாவை?
v வழுவமைதி
ஐந்து வகைப்படும்.
v அவை,
திணை,
பால்,
இடம்,
காலம்,
மரபு
என்பனவாகும்.
10. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
v வினா
ஆறு வகைப்படும்.
v அவை,
அறிவினா,
அறியா
வினா,
ஐய
வினா,
கொளல்
வினா,
கொடை
வினா,
ஏவல்
வினா என்பனவாகும்.
11. விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
v விடை
எட்டு வகைப்படும்.
v அவை,
சுட்டு,
மறை,
நேர்,
ஏவல்,
வினா
எதிர் வினாதல்,
உற்றது
உரைத்தல்,
உறுவது
கூறல்,
இனமொழி
என்பனவாகும்.
12. பொருள்கோள் என்றால் என்ன?
v பொருள்கோள்
என்பது,
v செய்யுளில்
உள்ள தொடர்களைப் பொருளுக்கு ஏற்றவகையில் இணைத்தோ, மாற்றியோ
பொருள் கொள்வதாகும்.
13.
பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
v பொருளிகோள்
எட்டு வகைப்படும்.
v அவை,
ஆற்றுநீர்,
மொழிமாற்று,
நிரல்நிறை,
பூட்டுவில்,
தாப்பிசை,
அளைமறிபாப்பு,
அடிமறிமாற்று,
கொண்டுகூட்டுப்
பொருள்கோள் என்பனவாகும்.
14. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?
இதோ.. இருக்கிறதே சொடுக்கியைப் போட்டாலும்
வெளிச்சம் வரவில்லையே மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?
மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
v எந்தப்
பக்கம் இருக்கிறது? : அறியா வினா
v இதோ..
இருக்கிறதே : சுட்டு விடை
v மின்சாரம்
இருக்கிறதா?
இல்லையா? : ஐய வினா
15. “தஞ்சம்
எளியர் பகைக்கு” –
இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும்
எழுதுக
சீர் அசை வாய்பாடு
தஞ்சம் நேர்நேர் தேமா
எளியர் நிரைநேர் புளிமா
பகைக்கு நிறைவு பிறப்பு
16. கீழ்வரும்
தொடர்களில் பொருந்தாத கருப்பொருளை திருத்தி எழுதுக?
(அ)
உழவர்கள் மலையில் உழுதனர்
விடை :
உழவர்கள் வயலில் உழுதனர்
(ஆ)
முல்லை பூச்செடியை பார்த்தவாறே பரதவர் கடலுக்கு சென்றனர்
விடை :
தாழை , நெய்தல்
பூவைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்கு சென்றனர்
17. காட்டில்
விளைந்த வரகில் சமைத்த உணவு மழை கால மாலையில் சூடாக
உண்ண
சுவை மிகுந்து இருக்கும் – இத்தொடரில் அமைந்துள்ள
முதற்பொருள் , கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக
முதற்பொருள்
- கருப்பொருள்
முல்லை
நிலம் - காடு - உணவு – வரகு
சிறுபொழுது
– மாலை - பெரும்பொழுது –
மழைகாலம்,கார்காலம்
18. அன்பின்
ஐந்திணைகளை எழுதுக ?
குருஞ்சி , முல்லை மருதம் , நெய்தல்
, பாலை.
19.
முதற்பொருள்
என்பன யாவை?
நிலம்,பொழுது,
20. கருப்பொருள்
என்றால் என்ன ?
ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள் ,
விலங்கு , பூ , நீர் போன்றவை .
21. ஐவகைத்திணைகளின்
சிறு பொழுதுகளை எழுதுக?
திணை சிறுபொழுது
குருஞ்சி
, - யாமம்
முல்லை - மாலை
மருதம் - வைகறை
நெய்தல் - ஏற்பாடு
பாலை - நண்பகல்
22. ஓடிக்கொண்டிருந்த
மின்விசிறி சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள்
பேச்சு தடைபட்டது. (தனிச்சொற்றொடராக
மாற்றுக)
ஓடிக்கொண்டிருக்கும்
மின்விசிறி சட்டென நின்றது,. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
23. ‘கொள்வோர்
கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய்
வார்த்தை உடம்பு தொடாது’ அ) அடி எதுகை எடுத்து எழுதுக ஆ)இலக்கண
குறிப்பு
எழுதுக
அ) அடி எதுகை -
கொள்வோர் , உள்வாய்
ஆ) இலக்கண குறிப்பு
- கொள்க, குறைக்க - வியங்கோள் வினைமுற்றுகள் 24. யாப்பின் உறுப்புகள்
யாவை?
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என ஆறு
வகைப்படும்.
25. நால்வகைப் பாக்கள் யாவை ?
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என
பாக்கள் நான்கு வகைப்படும்.
26. வெண்பாவின் வகைகள் யாவை?
குறள்
வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று
ஐந்து வகைப்படும்.
27. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை ?
நேரிசை
ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில
ஆசிரியப்பா என்று நான்கு வகைப்படும்.
28.
வினைமுற்று வினையாலணையும் பெயராக மாற்றிக் தொடர்களை இணைத்துப்
எழுதுக
v கலையரங்கத்தில்
எனக்காக காத்து இருக்கிறார். அவரை அழைத்து
வாருங்கள்.
கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருந்தவரை அழைத்து வாருங்கள்.
v ஊட்ட
மிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
ஊட்ட
மிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள்
பெற்றார்.
v நேற்று
என்னை சந்தித்தார். அவர் என் நண்பர்.
நேற்று
என்னை சந்தித்தவர் என் நண்பர்.
v பொது
அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில்
வென்றார்.
பொது
அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
29. ‘அறிந்தது,
அறியாதது, புரிந்தது, புரியாதது,
தெரிந்தது,
தெரியாதது,
பிறந்தது,
பிறவாதது’
இவை
அனைத்தையும் யாம் அறிவோம். அது
பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம்
எமக்குத் தெரியும்.
இக்கூற்றில்
வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
அறிந்தது
- அறிதல்
அறியாதது
- அறியாமை
புரிந்தது
- புரிதல்
புரியாதது - புரியாமை
தெரிந்தது - தெரிதல்
தெரியாதது - தெரியாமை
பிறந்தது - பிறத்தல்
பிறவாதது - பிறவாமை.
30. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
வெட்சி
- கரந்தை
வஞ்சி - காஞ்சி
நொச்சி - உழிஞை
தும்பை - வாகை
31.
அவந்தி நாட்டு
மன்னன் மருதநாட்டு மன்னனுடன் போர்புரிந்து அந்நாட்டைக்
கைப்பற்ற
நினைக்கிறான். அப்போர்
நிகழ்வைப் புறப்பொருள்
வெண்பாமாலை
கூறும்
இலக்கணத்தின் வழி விளக்குக.
v புறத்திணை - வஞ்சித்திணை
, (மண்ணாசைக் கருதி, போர் செய்தல்)
v அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டை கைப்பற்ற வஞ்சிப்பூ சூடிப் போருக்குச் செல்லுதல். “வாடா வஞ்சி……………………….
32. மதில்போர் பற்றிய புறத்திணைகள்
யாவை?
நொச்சி, உழிஞை
33. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அவை யாவை?
v பன்னிரண்டு வகைப்படும்.
v வெட்சி, கரந்தை,
வஞ்சி, காஞ்சி, நொச்சி,
உழிஞை, தும்பை, வாகை,
பாடாண் , பொதுவியல் , கைக்கிளை, பெருந்திணை.
34.
தீவக அணியின் வகைகள் யாவை ?
v தீவக
அணி மூன்று வகைப்படும்.
v அவையாவன:
முதல் நிலைத் தீவகம் , இடைநிலைத் தீவகம் , கடை நிலைத் தீவகம்
35.
தன்மை அணியின் வகைகளை எழுதுக.
v தன்மையணி
நான்கு வகைப்படும்.
v பொருள்
தன்மை அணி
v குணத்
தன்மையணி
v சாதித்
தன்மை அணி
v தொழிற்
தன்மையணி
36. அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது ?
v இப்பாடலில்
நிரல் நிறை அணி பயின்று வந்துள்ளது .
v சொல்லையும்
பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே
இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.
37.
குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத்
தருக.
v குறள்
வெண்பா வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளால் வரும் முதல் அடியில் நான்கு
சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் வரும்.
v எடுத்துக்காட்டு:
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
38.
வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும்.
துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு
உரியது.
இத்தொடர்களை
ஒரே தொடராக இணைத்து எழுதுக
வஞ்சிப்பாவிற்கு
தூங்கல் ஓசையும் கலிப்பாவிற்கு தூள்ளல் ஓசையும் உரிய ஓசைகளாகும்.
39.
பிறமொழி சொற்களைத்
தமிழ் சொற்களாக மாற்றி எழுதுக. (ப எண் : 150)
|
பிறமொழிச்சொற்கள்
|
தமிழ்
சொல்
|
|
கோல்டு பிஸ்கட்
|
தங்கக்கட்டி
|
|
யூஸ்
|
பயன்
|
|
வெயிட்
|
எடை
|
|
ஆன்சர்
|
விடை
|
|
ஈக்வலாக
|
சமமாக
|
|
எக்ஸ்பெரிமென்ட்
|
பரிசோதனை
|
|
ரிப்பிட்
|
திரும்பவும்
|
|
ஆல்
தி பெஸ்ட்
|
வாழ்த்துகள்
|
40.
இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக
சிலை,
சீலை - சிலையைத் திரைச்சீலையால் மறைந்திருக்கிறார்கள்
தொடு,
தோடு - காதில் உள்ள தோடை கையால் தொடு
மடு,
மாடு - மலை மடுவில் ஆடு மேய்ந்தது
மலை,
மாலை - மாலை நேரத்தில் அதிகமான மேகம்
மலையில் தவழும்
வளி,
வாளி - வளியை வாளியில் அடக்க முடியாது.
விடு,
வீடு -
கீழான பண்பை விடு;
உன் வீடு நல்லறம் பூணும்.
41.
பழமொழிகளை நிறைவு
செய்க.
உப்பில்லாப்
பண்டம் குப்பையிலே
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு மட்டும்
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு
42.
சொற்களை இணைத்து புதிய சொற்களை உருவாக்குக
தேன், விளக்கு,
மழை, விண், மணி,
விலங்கு,
செய்,
மேகலை,
வான்,
பூ.
பூவிலங்கு,
தேன்மழை, தேன்பூ, விண்மழை, மணிமேகலை, வான்மழை, பூமழை, செய்தேன்,
43.
சந்தக்
கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
”தேணிலே
ஊரிய செந்தமிழின் - சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே
எம்முயிர் உல்லலவும் - நிதம்
ஓதி
யுனர்ந்தின் புருவோமே”
”தேனிலே
ஊறிய செந்தமிழின் – சுவை
தோரும் சிலப்பதி காரமதை
ஊனிலே
எம்முயிர் உள்ளளவும் - நிதம்
ஓதி
யுணர்ந்தின் புறுவோமே”
44.
கீழ்க்காணும்
சொற்களின் கூட்டப் பெயர்களை கண்டுபிடித்து எழுதுக
கல்
- குவியல்
(கற்குவியல்)
பழம் - குலை
(பழக்குலை)
புல் - கட்டு (புற்கட்டு)
ஆடு - மந்தை (ஆட்டுமந்தை)
45. வல்லின ஒற்றை இட் டும் நீக்கியும் எழுதுக.
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
காகத்திற்குக் காது உண்டா? அதற்குக்
காது கேட்குமா?
46. எல்லா பறவைகளுக்கும் காது உண்டு.
செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும்.
மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல்
புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும்.
எல்லாப்
பறவைகளுக்கும் காது உண்டு. செவித்
துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல்
இருக்காது.
காகத்திற்கு
காது உண்டு.
காதுக்
கேட்கும்.
47. பறவைகளுக்கு பார்த்தல்,
கே ட்ட ல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறை வாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
பறவைகளுக்குப்
பார்த்தல்,
கேட்ட
ல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும்.
சுவைத்தல்
உணர்வு குறை வாகவும் நுகர்தல் உணர்வு
இல்லையென்றேக் கூறலாம்.
48. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
(இயற்கை
– செயற்கை
- பாதைத்
தெரியாத இயற்கைக் காடுகளில்பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.)
v கொடு
– கோடு
- அளவுகோள் கொடு.
கோடு
வரைய வேண்டும்.
v கொள்
– கோள்
- கோள்களை அறிந்து கொள்.
v சிறு
– சீறு - சிறு பாம்பு,
சீறுவதை
பார்.
v தான்
– தாம் - கண்ணன் தான்
செய்ததாக,
தாமே
ஒப்புக்கொண்டான்
v விதி
– வீதி - வீதிதோறும் நூலகம் அமைத்தால்,
நாட்டின்
தலைவிதி மாறிவிடும்.
49. குறிப்பைப் பயன்படுத்தி விடைதருக. (குறிப்பு
– எதிர்மறையான சொற்கள்)
v மீளாத்
துயர்
- மீண்ட
இன்பம்
v கொடுத்துச்
சிவந்த - கொடாது சிவக்காத
v மறைத்துக்
காட்டு - வெளிப்படுத்தி மறை
v அருகில்
அமர்க - தூரத்தில் செல்க
v பெரியவரின்
அமைதி - சிறியவரின் ஆர்ப்பாட்டம்
v புயலுக்குப்
பின் - தென்றலுக்கு முன்
50.
கலவைச் சொற்றொடராக
மாற்றுக.
(கூத்துக் கலைஞர்
பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்).
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
51.
தொடர் சொற்றொடராக
மாற்றுக)
இன்னாசியர் புத்தகங்களை வாரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில்
அடுக்கிவைத்தார். புத்தகங்களைக் கேட்பவர்களுக்கு
எடுத்துக்கொடுத்தார்.
இன்னாசியார்
புத்தகங்களை வாரிசைப்படுத்தினார்; அடுக்கிவைத்தார்; கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.
52. பின்வரும் தொடர்களுக்கு,
பொருத்தமான
தொடர்அமைக்க
v வரப்போகிறேன் - நான் வரப்போகிறேன்.
v கொஞ்சம் அதிகம் - கொஞ்சம் அதிகமாக உண்டேன்.
v இல்லாமல் இருக்கிறது - மனிதநேயம் இல்லாமல் இருக்கிறது.
v முன்னுக்குப் பின் - திருடன் முன்னுக்குப்பின்
பேசுவான்.
v மறக்க நினைக்கிறேன் - தீயவற்றை மறக்க நினைக்கிறேன்.
52.
தொகைச் சொற்களை
பிரித்து எழுது. தமிழ் எண்ணுரு தருக. (ப.எண்) 180
தொகைச்சொல் பிரித்தல் தமிழ் எண்ணுரு
மூவேந்தர் மூன்று
+ வேந்தர் (3)
மூன்று - ௩
நாற்றிசை நான்கு + திசை (4) நான்கு - ௪
முத்தமிழ் மூன்று
+ தமிழ் (3)
மூன்று - ௩
இருதிணை இரண்டு
+ திணை (2)
இரண்டு - ௨
முப்பால் மூன்று
+ பால் (3)
மூன்று - ௩
ஐந்திணை ஐந்து
+ திணை (5)
ஐந்து - ௫
நானிலம்
நான்கு
+ நிலம் (4)
நான்கு - ௪
அறுசுவை ஆறு + சுவை (6)
ஆறு - சு
பத்துப்பாட்டு பத்து + பாட்டு (10)
பத்து - ௧௦
எட்டுத்தொகை எட்டு + தொகை (8)
எட்டு - ௮
53.
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக
ஊர்ப்பெயர் மரூஉ
தஞ்சாவூர் - தஞ்சை
திருச்சிராப்பள்ளி -
திருச்சி
திருநெல்வேலி -
நெல்லை
உதகமண்டலம் -
உதகை
கும்பகோணம் -
குடந்தை
சைதாப்பேட்டை -
சைதை
மயிலாப்பூர் - மயிலை
புதுச்சேரி - புதுவை
புதுக்கோட்டை -
புதுகை
கோயம்புத்தூர் -
கோவை
நாகப்பட்டினம் -
நாகை
மன்னார்குடி - மன்னை
54.
பொருத்தமான இடங்களில்
நிறுத்தக் குறியிடுக.
(அரசால் நிறுவப்படும் கட்டடங்களில் சிலைகளில்
நிறுவியவர் பெயர் நிறுவப்பட்ட காலம் நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள் இவை நமது
இன்றைய வரலாற்றைப் புலப்படுத்துபவை அதுபோலவே கோவில்களிலும்
பழமையான நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும்
இடம் பெற்றிருக்கும்)
அரசால் நிறுவப்படும்
கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியர் பெயர் நிறுவப்பட்ட காலம்,
நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள். இவை நமது இன்றைய வரலாற்றைப் புலப்படுத்தியவை. அதுபோலவே
கோவில்களும் பழமையான
நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம் பெற்றிருக்கும்.
55. தொடரில் விடுபட்ட
வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.
v வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
v அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் மலர்ந்தது.
v கருணை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
v கண்ணுக்கு முழுமையாக இருக்கும் பசுமை புல்வெளிக்கு கதிரவனின்
கதிர் வெயில் பரவிக்கிடக்கிறது.
v வெயிலில் அலையாதே: உடல் கருத்து விடும்
56. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு
எழுதுக.
(தங்கும்,
மரவீடு, மரம்வீடு, அவிழும்,
தங்கும், தோற்பவை, விருது,
தோற்பாவை,
கவிழும்,
விருந்து)
v விரட்டாதீர்கள் - பறவைக்கு மரம்வீடு
v வெட்டாதீர்கள் கண்ட மனிதருக்கு அவைதரும் மரவீடு
v காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்
v சோலை பூவினை வண்டினம் கவிழும்
v மலை முகட்டில் மேகம் தங்கும் அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத்
தயங்கும்.
v வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் - இதைத் தத்துவமாய் தோற்பாவை
கூத்து சொல்லும்.
v தெருக்கூத்தும் நடிகருக்குக் தைட்டலே விருது அதில் வரும்
காசு குறைந்தாலும் அது வேயவர் விருந்து
57.
நான் எழுதுவதற்கு
ஒரு தூண்டுதலும் உண்டு. அதற்குரிய
காரணமும் உண்டு
இத்தொடரை இரு தொடர்களாக்குக.
v நான்
எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு
v நான்
எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு
58. பொருத்தமான நிறுத்தற் குறியீகளை
இடுக
சேரர்களின்
பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை
வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர்
சூட்டிக் கொண்டனர் இதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
சேரர்களின்
பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை
குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி,
வெற்பன்
எனவும்,
பிற
மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர்.
இதற்கு
சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
கலைச்சொற்கள்
தருக
Aesthetics - அழகியல்
Artifacts - கலைப்படைப்புகள்
Terminology - கலைச்சொல்
Myth - தொன்மம்
Classical literature - செவ்விலக்கியம்
Epic literature
- காப்பிய இலக்கியம்
Devotional literature - பக்தி இலக்கியம்
Ancient literature - பண்டைய இலக்கியம்
Regional literature - வட்டார இலக்கியம்
Folk literature - நாட்டுபுற இலக்கியம்
Storm
- புயல்
Land
breeze - நிலக்காற்று
Tornado
- சூறாவளி
Sea
breeze - கடற்காற்று
Tempest
- பெருங்காற்று
Whirl
wind - சுழல்
காற்று
Vowel - உயிரெழுத்து
consonant
- மெய்யெழுத்து
Homo
graph - ஒப்பெழுத்து
Monolingual
- ஒரு மொழி
Conversation
- உரையாடல்
Discussion
- கலந்துரையாடல்
Nanotechnology
- மீநுண்தொழில்நுட்பம்
Space
Technology - விண்வெளித்
தொழில்நுட்பம்
Biotechnology
- உயிரித் தொழில்நுட்பம்
Cosmic
rays - விண்வெளிக்
கதிர்கள்
Ultraviolet
rays - புற
ஊதாக் கதிர்கள்
Infrared
rays - அகச்சிவப்புக்
கதிர்கள்
Consulate - துணைத்தூதரகம்
Patent - காப்புரிமை
Document - ஆவணம்
Guild - வணிகக்குழு
Irrigation - பாசனம்
Territory - நிலப்பகுதி
Humanism - மனிதநேயம்
Cultural Boundaries - பண்பாட்டு
எல்லை
Cabinet - அமைச்சரவை
Cultural values - பண்பாட்டு
விழுமியங்கள்
Belief - நம்பிக்கை
Philosopher -
மெய்யியலாளர்
Renaissance -
மறுமலர்ச்சி
Revivalism - மீட்டுருவாக்கம்
அகராதியைக் கண்டு பொருள் எழுதுக
ஊண் -
உணவு திணை - ஒழுக்கம், நிலப்பிரிவு
ஊன் - இறைச்சி,
உடம்பு தினை - சிறுதானியம்
அண்ணம் - மேல்வாய் வெல்லம் - இனிப்புப்
பொருள்
அன்னம் - சோறு, ஒருவகை
பறவை வெள்ளம்
- நீர்ப்பெருக்கு
அகன்சுடர்
-
உயர்ந்த தீபம்
கட்புள்
- விழித்திருக்கும் பறவை
திருவில்
- வானவில்
ஆர்கலி
- கடல், மழை, பறவை
கொடுவாய்
- ஆயுதங்களில்
வளைந்த வாய்,
ஒரு வகை மீன்
அடவி - காடு
அவல்
- பள்ளம், விளைநிலம், குளம்
சுவல்
- மேட்டு நிலம், தோள், கழுத்து
செறு - வயல், பாத்தி,
செய்
பழனம்
- பொய்கை, மருத நிலம், சேற்று நிலம், பொது நிலம்
புறவு - காடு,
முல்லைநிலம், புறா, முல்லைக்கொடி
அவிர்தல் - ஒளிர்தல்,
விரிதல்
அழல் - நெருப்பு,
வெப்பம்
உவா - நிறைந்த, கடல்,
முழுநிலவு
கங்குல் - இரவு, இருள்
கனலி - நெருப்பு, சூரியன்
மன்றல் - திருமணம்,
அடிச்சுவடு - காலடியின்
அடையாளம்
அகராதி - அகரமுதலி
தூவல் - மழை, இறகு,
பேனா,
ஓவியம்
மருள் - மயக்கம்,
வியப்பு
மிரியல் -
மிளகு
வருத்தணை - பெருக்குதல்
அதசி - சணல்
துரிஞ்சில் - வௌவால்
பகுபத உறுப்பிலக்கணம்
வந்தனன்
= வா(வ)+த்(ந்)+த்+அன்+அன்
வா = பகுதி
வா(வ) = வா,
வ
என குறுகியது (விகாரப்பட்டது)
த் = சந்தி
த்(ந்)
= த்,
ந்
ஆகத் திரிந்தது
( விகாரப்பட்டது)
த் = இறந்தகால
இடைநிலை
அன்
= சாரியை
அன் = படர்க்கை
ஆண்பால் வினைமுற்று விகுதி.
கவனிக்க.
Ø பகுபத
உறுப்பிலக்கணம் செய்ய கொடுக்கப்படும் சொல் தனிவினைச்சொல்லாகத்தான் இருக்கும்.
அதாவது,
வினைமுற்றுகள்,
வினையெச்சம்,
பெயரெச்சம்,
தொழிற்பெயர்
Ø முதலில்
கொடுக்கப்பட்ட சொல்லின் இலக்கணத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில்
பிரிப்பதற்கும் விகுதி அமைப்பதற்கும் அதுவே அடிப்படை.
Ø அடுத்து
காலத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பிரிக்கும்
போது நிகழ்கால சொல் அல்லாத பிற சொல் வந்தால் பகுதி அமைத்து மெய்யும் உயிருமாகப் பிரிக்க
வேண்டும்(பொதுவாக)
. ( இருப்பினும்
இலக்கணம் உணர்த்தும் விகுதி அடிப்படையில் விகுதி வரவேண்டுமாதலால் அதற்குத் தகுந்தாற்போல்
பிரிக்க வேண்டும்.)
Ø நிகழ்கால
சொல் வந்தால் பகுதி அமைத்து, நிகழ்கால இடைநிலை
அமைத்து,
விகுதி அமைக்க வேண்டும்.
மாறாக
மெய்யும் உயிருமாகப் பிரிக்கக்கூடாது.
Ø தொழிற்பெயர்
காலம் காட்டாது.
ஆதலால்
தொழிற்பெயரில் காலம் காட்டும் இடைநிலை வரக்கூடாது. அதற்கு
மாற்றாக சந்தியோ எழுத்துப்பேரோ வரும்.
Ø தொழிற்பெயர்
அல்லாத பிற சொற்களில் ஒரு ’த்’
வந்தால்
அது இடைநிலை.
இரண்டு
’த்’
வந்தால்
முதலில் இருப்பது சந்தி, இரண்டாவதாக
இருப்பது இடைநிலை.
Ø ’ய்’
உடன்படுமெய்
சந்தியாக வரும்.
’வ்’
எதிர்கால
இடைநிலையாகவும் உடன்படுமெய் சந்தியாகவும் வரும். என்வே,
’வ்’
வந்தால்
கவனமாக இருக்கவும்.
Ø சில
நேரங்களில்
‘ன்’
புணர்ந்து
கெட்டு
’இ’
மட்டும்
இறந்தகால இடைநிலையாக வரும். புணர்ந்து கெட்டதை
அடைப்புக்குள் காட்டவேண்டும்.
இ(ன்)
Ø சில
நேரங்களில் காலம் காட்டும் இடைநிலை இல்லாமல், பகுதி ஒற்று இரட்டித்து காலத்தை காட்டும்.
(பகுபத உறுப்புகளை உங்கள் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்க)
No comments:
Post a Comment