GOVERNMENT SCHOOL RETTANAI APK.

Monday, April 20, 2020

10 TAMIL உரைப்பத்தி வினாவிடை


பகுதி – III      பிரிவு 1
உரைப்பத்தி வினாவிடை
1.   தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண  உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால்தான்விருந்தே புதுமைஎன்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.
. விருந்தினர் என்போர் யாவர்?
      முன்பின் அறியாத புதியவர்கள்
. விருந்து குறித்து தொல்காப்பியர் கூறியது யாது?
      விருந்தே புதுமை
. இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான  தலைப்பு ஒன்று தருக.
      விருந்து

2.  பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்ற்ன.   
புவி உருவானபொது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியா த் தொடர்ந்து  மழைப் பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
. பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.
மீண்டும் மீண்டும்

. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
. பெய்த மழை - இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
பெய்மழை
.  இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
நெருப்புப் பந்தை நீரில் குளிரச் செய்தல்.
. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை ?
பஞ்ச பூதங்கள்
3.    .நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து
       கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation)  
       என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே
       மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது.
       .நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்
       பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர்
       சுவதைக் காதணி கேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில்
       மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியேபேசுவார். அவையில் உள்ள
       பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்
       கொண்டு  அவரது மொழியில்  புரிந்து கொள்வார்.
       இப்பத்தியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
1.   .நா. அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?
.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
2.   மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
மொழிபெயர்ப்பு (translation)  என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது ஆகும்.
3.   விளக்குவது’(Interpreting) என்றால் என்ன?
ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) எனப்படும்.
4.   மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பார்?        மொழிபெயர்ப்பாளர்  பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் அமர்ந்திருப்பார்.
5.   காதணிக் கேட்பிஎதற்குப் பயன்படுகிறது?
அவையில் உள்ள பார்வையாளர், தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்  கொண்டு  அவரது மொழியில்  புரிந்து கொள்ள பயன்படுகிறது.
4.   பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு  
       வரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. திருக்குறளில்
       மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும்
       பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் காண
       முடிகிறது. ஊர் ஊராகச் சென்று நிகழ்த்துகிற கூட்டுக்குடும்ப கலையாகத்
       தோற்பாவைக் கூத்து விளங்குகிறது. தோற்பாவைக் கூத்து கையுறைப்
       பாவைக் கூத்து, மொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
) மரப்பாவையைப் பற்றி குறிப்பிடும் நூல்?
          திருக்குறள்
) பாவை குறித்த செய்திகள் அடங்கிய இலக்கிய காலம்?
             சங்ககாலம்
) தோற்பாவைக் கூத்தின் மாற்று வடிவங்கள் எவை?
                    கையுறைப்பாவைக் கூத்து, மொம்மலாட்டம்
)  தோற்பாவைக் கூத்து பற்றி குறிப்பிடும் நூல்கள் எவை?
                   திருவாசகம்,  பட்டினத்தார் பாடல்
) இவ்வுரைப் பத்திக்கு பொருத்தமான தலைப்பு தருக.
                       பாவைக்கூத்து
5.   தப்புஎன்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே அதன் இசைக்கு ஏற்ப
       ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும். ஆண்கள் மட்டுமே ஆடிவந்த
       இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது. இவ்வாட்டம்
       தப்பாட்டம், தப்பட்டை, தப்பு என்றும் அழைக்கப்படுகின்றது. தப்பு என்பது
       வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவி. கோவில் திருவிழா,
       திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம், விளம்பர நிகழ்ச்சி ஆகியவற்றில்
       தப்பாட்டம் ஆடப்படுகின்றது. ‘தப்தப்என்று ஒலிப்பதால் அந்த ஒலியின்
      அடியாகத்தப்புஎனப்பெயர் பெற்றதெனக் கூறப்படுகிறது.

      ) தப்ஆட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
          தப்பாட்டம், தப்பட்டை, தப்பு
      ) தப்பாட்ட நிகழ்வை எழுதுக.
தப்புஎன்ற தோற்கருவியை இசைத்துக்கொண்டே அதன் இசைக்கு ஏற்ப  ஆடுகின்ற நிகழ்கலையே தப்பாட்டமாகும்.
      ) ‘தப்புபெயர்காரணம் தருக.
                    தப்தப்என்று ஒலிப்பதால் அந்த ஒலியின் அடியாகத்தப்பு
எனப்பெயர் பெயர் வந்தது.
      ) ‘தப்புவின் வடிவம்?
                    வட்ட வடிவம்
      ) இவ்வுரைப் பத்திக்கு பொருத்தமான தலைப்பு தருக.
                    தப்பு
6.   ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள      
      அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட ஆசிய கையெழுத்துச்         
       சுவடி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான          முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின்         
      அலெக்ஸாண்டிரியா  துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும்
      இடையிலான வணிக        ஒப்பந்தம். இது கி.பி. 2ஆம் நூற்றாண்டில்
      இடைப்பகுதியில் ஏற்படுத்திக்    கொள்ளப்பட்டது.
) இப்பத்தியில் குறிப்பிடப்படும் அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
              ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னா வில் அமைந்துள்ளது
) ‘முசிறிஎந்நாட்டு துறைமுகம்?
              சேர நாட்டுத் துறைமுகம்
) அலெக்ஸாண்டிரியா துறைமுகம் எந்த நாட்டில் உள்ளது?
              எகிப்து நாடு
)  பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட வணிக ஒப்பந்தம் எந்த நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது?
                    கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டது.


7.  இந்திய விடுதலைக்குப் பிறகு மாநிலங்களை மொழிவாரியாகப்பிரித்தனர்.             
     அப்போது, ஆந்திரத் தலைவர்கள் சித்தூர் மாவட்டம் முழுவதையும் புதிதாக            அமையவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் இணைக்க விரும்பினர். அச்சூழலில்             வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச்          
     செய்தவர் தமிழாசான் மங்கலங்கிழார் கழகம் சென்னையிலும்,  
     திருத்தணியிலும்        தமிழர் மாநாடு நடத்தியது. சித்தூர், புத்தூர், திருத்தணி
     ஆகிய     இடங்களிலும் வடக்கெல்லைப் போராட்டத்தைத் தொடங்கியது.
) இந்திய மாநிலங்கள் எப்பொழுது பிரிக்கப்பட்டது?
                இந்திய விடுதலைக்குப் பிறகு
) சித்தூர் மாவட்டத்தை எதனுடனும் இணைக்க விரும்பினர்?
                ஆந்திர மாநிலத்துடன்
) வடக்கெல்லைப் போராட்டம் தொடங்கிய இடங்கள்?
                சித்தூர், புத்தூர், திருத்தணி
)  வடக்கெல்லைத் தமிழ் மக்களை ஒருங்கிணைத்தது யார்?
                தமிழாசான் மங்கலங்கிழார்
8.  தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது   
வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சீறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப்   
போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு,
பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத்
தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர்
மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.
) போரிலும் அறநெறிகளைப் பின்பற்றியவர் யார்?
           தமிழர்
ஆ) போர் அறம் என்பது யாது?
போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சீறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
இ) இவ்வுரைப் பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
          போர் அறம்

No comments:

Post a Comment