செய்யுள் மற்றும்
உரைநடை குறுவினாக்கள்
1. மண்ணும்
சிலம்பே!
மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடித்தாழ
வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள
ஐம்பெரும் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள
காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
சீவக
சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
2.
தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
v அக்காலத்தில் நம் முன்னோர், உடலுக்குத் தேவையான
ஆற்றலை பழங்களை
உண்பதன் மூலம் பெற்றனர்.
v ஆனால் இக்காலத்திலோ பழங்கள் (பழம்+கள்)
உண்பதன் மூலம் பெறுகின்றனர்.
3. நச்சப் படாதாவன் செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப்
பொருள் தருக.
விரும்பப்படாதவன் (பிறருக்கு உதவி செய்யாததால் யாராலும் விரும்பப்படாதவன்)
4. விருந்தினரை
மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
வாருங்கள்!
அமருங்கள்! நலமாக உள்ளீர்களா! உணவு உண்கிறீர்களா! தேநீர் அருந்துங்கள்! தண்ணீர்
குடியுங்கள்!
5. ’இறடிப்
பொம்மல் பெறுகுவிர்’ இத்தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக.
சிற்றூருக்கு ச் சென்றால் அங்கு வெந்த
மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாக பெறுவீர்கள்.
6. முல்லை
நிலத்தில் இருந்தும் மருத நிலத்தில் இருந்து கிடைக்கும் உணவு
பொருள்கள் யாவை?
v முல்லை
நிலத்துக்குரிய உணவுப் பொருள்கள் - வரகரிசி சோறும் சாமை (சிறுதானியம்) காட்டில்
கிடைக்கும் உணவுப் பொருட்களான பழங்கள், பால் தொடர்பான உணவுப் பொருள்கள்.
v மருதநிலத்து
உணவுப் பொருள்கள் - செந்நெல் சோறும், வெண்ணெல் சோறும்,
நிலத்தில் பயிரிடும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியன
7.
தானியம் ஏதும் இல்லாத நிலையில்
விதைக்காக வைத்திருந்த தினையை
உரலில் இட்டு குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள்
தலைவி என்பது இலக்கிய செய்தி. விருந்தோம்பலுக்குச்
செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக்
குறிப்பிடுக.
v விருந்தோம்பலுக்கு
செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்று கிடையாது.
மனம்தான் இன்றியமையாதது. ஏனெனில், தமிழர்களின் வாழ்வில் விருந்தோம்பல் ஒரு அங்கமாக
உள்ளது.
இன்று
பள்ளியில் ஒரு மாணவனுக்கு உணவு இல்லாத பட்சத்தில் பிற மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த
உணவினைப் பகிர்ந்து உண்கின்றனர்.
v பள்ளியில்
தொடங்கும் இந்த பண்பு கல்லூரிகளிலும்
அலுவலகங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மேலும் , செல்வம் உள்ள
பலரும் தாங்கள் செல்வத்தைச் சேகரிப்பதில் தான் குறிக்கோளாக உள்ளனர். எவரும் பிறருக்குக்
கொடுப்பதில்லை.
அவ்வாறு
இருக்கையில் செல்வம் என்று விருந்தோம்பலை தீர்மானிக்கும் என்பது மூடத்தனம்.
விருந்தோம்பலுக்கு
மனம் மட்டுமே தேவை. கொடுக்கவேண்டும் என்ற உள்ளம் யாரிடத்தில்
உள்ளதோ அவர்கள் மட்டுமே விருந்தோம்பல் பணிகளை மேற்கொள்ள முடியும்.
8. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
v உயிரைவிட சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் – உயிரினும் ஓம்பப் படும்
v ஊரின் நடுவில் நச்சுமரம் காய்த்தது போன்றது – நடு ஊருள் நச்சுமரம் காய்த்தற்று
v ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின்
எய்துவர் மேன்மை
9. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற
செயற்கை நுண்ணறிவு பொதிந்த
இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக்
குறிப் பிடுக.
v செயற்கை
நுண்ணறிவால் இயங்கும் தானியங்கிக் கதவுகள்.
v செயற்கை
நுண்ணறிவால் இயங்கும் திறன்பேசிகள்.
10. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில்
காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால
வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது
எவ்வாறு?
v இத்தொடர், கோடை விடுமுறையில்
‘செல்வேன்’
என
அமைதல் வேண்டும்.
v அவ்வாறு
அமையாததால் கால வழுவாயிற்று. எனினும் உறுதிப்
பொருள் கருதி கால வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
11. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
v மருத்துவர்,
தன்னைக்
கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது தம்மீது கொண்ட அன்பின் காரணமாகவே என நோயாளிக் கருதுகிறார்.
v அந்த
அன்பும் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையும் அவர் நோயைக் குணமாக்குகிறது.
12. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்
வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
v நிலம்,
நீர்,
தீ,
காற்று,
ஆகாயம்
என்ற ஐந்தும்
v உயிர்கள்
உருவாகி வளர ஏற்ற சூழல்களாகப் பரிபாடல் குறிப்பிடுகிறது,
13. ‘வேர்டுஸ்மித்’
என்றால் என்ன?
v இயல்பான
மொழிநடைடிய உருவாக்கும் மென்பொருளுக்கு ‘வேர்டுஸ்மித்’
என்று
பெயர்
v இது
தகவல்களைக் கொடுத்ததுமே அழகானக் கட்டுரையைச் சில நொடிகளிலேயே உருவாக்கிவிடும்.
14. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
v செயற்கை
நுண்ணறிவு என்பது,
v ஒரு
மென்பொருளையோ அல்லது கணினி செயல்திட்ட வரைவையோ குறிக்கும்.
15. செயற்கை நுண்ணறிவுத் திறனுக்குச்
சில சான்றுகள் தருக.
v வணிக
வளாகங்களில் நாம் சென்றவுடன் கதவு தானே திறத்தல்.
v அறையில்
மூலையில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் திரும்புதல்.
16. ‘மெய்நிகர் உதவியாளர்’
என்பது எது?
v ‘மெய்நிகர்
உதவியாளர்’
என்பது,
திறன்பேசிகளில்
இயக்கம் ஒரு உதவு மென்பொருள்.
v இது
கண்ணுக்குப் புலப்படாமல், மனிதனைப் போல
நம்முடன் உரையாடி சில உதவிகள் செய்கிறது.
17. இலா(ELA) மென்பொருள் பற்றி எழுதுக.
v இலா(ELA)
என்பது
ஒருவகை மென்பொருள்.
v இது
ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
v வங்கிக்கு
வரும் பாடிக்கையாளருக்குச் சேவைகளை இணையம் மூலம் அளிக்கிறது.
18. ‘பெப்பர்’ என்னும் ரோபோ குறித்து எழுதுக.
v ஜப்பான்
சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
v வீட்டுக்கு,
வணிகத்துக்கு,
படிப்புக்கு
என்று மூன்றுவகை ரோபோக்கள் கிடைக்கின்றன.
19. குலசேகர ஆழ்வார் அன்னையாக உருவகித்துப் பாடுவது யாரை?
v குலசேகர
ஆழ்வார் அன்னையாக உருவகித்துப் பாடுவது
v வித்துவக்கோட்டு
இறைவனான உய்யவந்த பெருமாளை.
20. இடைக்காடனார் இறைவனிடம் சினந்து கூறியது யாது?
v இடைக்காடனார்
இறைவனிடம்,
பாண்டியன்
என்னை இகழவில்லை.
v சொல்லின்
வடிவாக உன் இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் பார்வதி தேவியையும் சொல்லின் பொருளாக விளங்கும்
உன்னையுமே அவமதித்தான் என்று சினத்துடன் கூறினார்.
21. “கழிந்த பெரும் கேள்வியினான்
எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன்
தென்சொல்” – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?
காதல்மிகு
கேண்மையினான் யார்?
v கழிந்த
பெரும் கேள்வியினான் : குசேலப் பாண்டியன்
v காதல்மிகு
கேண்மையினான்
: இடைக்காடனார்
22.
செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழுக்கத்
தொடர்களாக்குக.
v கற்போம்
கற்போம் கல்வியைக் கற்போம்
v அருளினைப்
பெருக்கக் கல்வி கற்போம்
v அறிவினைத்
திருத்தக் கல்வி கற்போம்
v மயக்கம்
அகற்றக் கல்வி கற்போம்
23. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக்
குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.
v விரும்பும்
மொழி : தெலுங்கு
v காரணம் : தமிழுக்கு அடுத்து அதிக மக்கள் பேசும் மொழி.
தமிழொடு தொடர்புடைய மொழி.
24.
“கரப்பிடும்பை இல்லார்”
–
இத்தொடரில் பொருள் கூறுக
v தன்னிடம்
உள்ள பொருளை பிறர்க்கு கொடுக்கும் நல்லாரை காணின் வறுமை
விலகும்
25.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின்
தன்மானத்தை எண்ணி
நகையாடுவது
குறித்துக் குறளின் கருத்து என்ன?
v எள்ளி
நகையாடாமல் கொடுக்க வேண்டும்.
v அப்போது
, இரப்பவர் உள்ளம் மகிழும்.
26.
கூரான
ஆயுதம் எது என்று செந்நாப் போதார் கூருகிறார்? ஏன் என்பதை
விளக்குக?
v உழைப்பால்
கிடைத்த ஊதியம்.
v அதுவே,
எப்பொழுதும் நிலையானது.
27.
உறங்குகின்ற
கும்பகர்ண எழுந்திராய் ! எழுந்திராய் !
காலதூதர்
கையிலே உறங்குவாய் ! உறங்குவாய் !
கும்பகர்ணனை
என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?
எங்கு அவனை உறங்க
சொல்லுகிறார்கள்
?
v உம்முடைய
பொய்யான வாழ்வு இன்று முதல் இறங்க தொடங்கிவிட்டது .
v கால
தூதர் கையில் உறங்க சொல்லுகிறார்கள்.
28.
நேற்று
நான் பார்த்த அர்ச்சுணன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனைகளையும் சிறந்த
நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிந்தேன் என்று சேகர் என்னிடம்
கூறினான். இக்கூற்றை அயர் கூற்றாக எழுதுக?
v முன்தினம்
தான்பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும்
சிறந்த
நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக சேகர்
என்னிடம்
கூறினான்.
29.
பாசவர்
, வாசவர் , பல்நிண
விலைஞர் , உமணர்--
சிலப்பதிகாரம் காட்டும்
இவ்வணிகர்கள்
யாவர் ?
v பாசவர்
- வெற்றிலை விற்பவர்
v வாசவர்
- நறுமணம் விற்பவர்
v பல்நிண
விலைஞர் - பல
வகை இறைச்சி விற்பவர்
v உமணர்
- உப்பு விற்பவர்
30.
மெய்க்கீர்த்தி
பாடப்படுவதன் நோக்கம் யாது ?
v மன்னர்களின்
வரலாற்று நிகழ்வுகளை அறியவும் ,
v அவை,அழியாமல்
இருப்பதற்கு கல்லிலும் செதுக்கினர்.
31.
வறுமையிலும்
படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்கு சான்று
தருக.
v வறுமை
வாட்டியது.
v அறிவுப்
பசி தூண்டியது
v வயிற்றுப் பசியோடு பழைய புத்தகம் வாங்கி படித்தார்.
32.
"
உரைப்பாட்டு மடை " - குறிப்பு எழுதுக
உரைநடையில்
அமைந்திருக்கும் பாட்டு .
33.
ஏழு
சுரங்கள் யாவை ?
ஸ,
ரி, க, ம, ப, த, நி.
34.
ஏழு
இசைகள் யாவை ?
குரல், தாரம் , உழை
,
துத்தம் , இளி , கைக்கிளை , விளரி
35.
சாந்தமான தொரு
பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன
ஒல்லித் தண்டுகள் - இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை
எழுதுக.
v மலர்தான்
இங்கு உலகம் .
v உலகத்தை
மலரின் தண்டுகள் தாங்குவதே உள்ளழகு.
36. பொருள்
தருக :
தால் - தாலாட்டு
உழுவை
- புலி
அகவுதல் - ஒலித்தல்
ஏந்தெழில்
- மிகுந்த அழகு
அணிமை
- அண்மை
37.
குறிப்பு வரைக. – ‘அவையம்’
v அறம்
கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.
v ‘அறம்
அறக் கண்ட நெறிமான் அவையம்’ என்கிறது
புறநானூறு.
v
உறையூரிலிருந்த அற
அவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
38.
மதுரையில் இருந்த அவையம் நடுநிலை மிக்கது என்கிறது மதுரைக்காஞ்சி
அறநெறிக் காலம் எது?
v சங்க
காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக் காலம் என்பர்.
39.
அறத்தின் குறியீடுகளாக போற்றப்பட்டன எவை?
v செங்கோல்
v வெண்கொற்றக்குடை
40.
அரசனின் கடமைகளாக சங்க இலக்கியங்கள் கூறுவன
யாவை ?
v நீர்நிலை
பெருக்குதல்
v நிலவளம்
காணுதல்
v உணவு
உற்பத்தியை பெருக்குதல்
v உணவினை
அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தல்
41.
தமிழரின் போர் அறம் குறித்து எழுதுக.
v தமிழர்
போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம்
என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர்,
சீறார்,
முதியோர்
ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
v தம்மை
விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்று புறநானூற்றில் ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.
42.
காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
v காலக்
கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிக்கிறது. வயது
முதிர்ந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார் ஆசிரியர்
.
v வாளித்
தண்ணீர்,
சாயக்
குவளை,
கந்தைத்
துணி,
கட்டைத்
தூரிகை கொண்டு சாளரத்தின் கதவுகளை சுத்தம் செய்வது போல காலக்கழுதை கட்டெறும்பான பின்பும்
அறப்பணி ஓயாது தொடர்கிறது.
43. வாளித் தண்ணீர்,
சாயக் குவளை,
கந்தைத் துணி,
கட்டைத் தூரிகை
இச்சொற்களை தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
v வீட்டின்
சுவர் சன்னல் போன்றவற்றில் அழுக்கு மற்றும் கரையான் படிவதைத்
தடுக்க வாளித் தண்ணீர் கொண்டு சுவரையும் ஜன்னலையும்
நன்கு கழுவ
வேண்டும். பிறகு
தந்தை துணியால் நன்கு துடைத்து விட வேண்டும் .
v மூன்றாவதாக
சாலையில் உள்ள சாயத்தை கட்டை தூரிகை கொண்டு சாயம்
பூசி புதுப்பிக்க வேண்டும்
.
44.
ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை ?
v குடியரசுத்
தலைவர் விருது
v சாகித்ய
அகாதெமி விருது
v சோவியத்
நாட்டு விருது
v ஞானபீட
விருது
v தாமரைத்திரு
விருது
45.
ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு சிலவற்றை எழுதுக.
v குருபீடம்
, யுகசந்தி ,
ஒரு
பிடி சோறு ,
உண்மை
சுடும்
46.
ஜெயகாந்தனின் புதினங்கள் நான்கினை எழுதுக .
v பாரிசுக்கு
போ , சுந்தரகாண்டம் , உன்னைப்போல் ஒருவன் ,
கங்கை
எங்கே போகிறாள்.
47.
‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே
வாழ்வு’ என்று நாகூர் ரூமி யாருடைய
வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
v பணம்,
பட்டம், பதவி, பொருள் ஆகியவற்றால் மற்றவர்களை மதிக்காமல் வாழ்பவர்களைத் தலைக்கணம் பிடித்தவர்கள்
என்கிறார்.
v எப்போதும்
பசி,
பட்டினி,
வறுமை
என்றிருக்கும் சித்தாள் தன் தலையில் சுமையைத்
தூக்கிச் செல்வதால் மட்டுமே வாழ்க்கை நடைபெறும் என்று சித்தாளின் வாழ்வைப் பற்றி கூறுகிறார்.
48.
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளை எழுதுக?
நதியின்
கால்கள் , ஏழாவது சுவை , சொல்லாத சொல் , “சித்தாளின் மனச்சுமைகள்.
No comments:
Post a Comment