GOVERNMENT SCHOOL RETTANAI APK.

Monday, April 20, 2020

10 TAMIL - பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க . (வினாக்கள் 12-21)


பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க .  (வினாக்கள் 12-21)
1.    செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் 

---------------------------------------------------------”
1.  இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?  
)கனிச்சாறு                        ஆ)கொய்யாக்கனி
இ)சிலப்பதிகாரம்                    ஈ) கம்பராமாயணம்

2.  இப்பாடலின் ஆசிரியர் யார்?  
)கம்பர்                                ஆ)இளங்கோவடிகள்
இ)கண்ணதாசன்                    ஈ) பெருஞ்சித்திரனார்.
3.   செந்தமிழேஇலக்கணக்குறிப்புத் தருக.  
)எண்ணும்மை                              ஆ)வினைமுற்று
இ)பெயரெச்சம்                      ஈ) பண்புத்தொகை
4.   எந்தமிழ்நாபிரித்து எழுதுக.  
)எந்+தமிழ்+நா                     ஆ) எந்தமிழ்+நா
இ) எம்+தமிழ்+நா              ) எம்+ தமிழ்நா
2.        தென்னன் மகளே திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
1.  இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?  
)கனிச்சாறு                        ஆ)கொய்யாக்கனி
இ)சிலப்பதிகாரம்                    ஈ) கம்பராமாயணம்
2.  இப்பாடலின் ஆசிரியர் யார்?  
)கம்பர்                                ஆ)இளங்கோவடிகள்
இ)கண்ணதாசன்                    ஈ) பெருஞ்சித்திரனார்.
3.   இன்னறும்  இலக்கணக்குறிப்புத் தருக.  
)எண்ணும்மை                              ஆ)வினைமுற்று
இ)பெயரெச்சம்                      ஈ) பண்புத்தொகை
4.   எண்தொகையே  பிரித்து எழுதுக.  
)எண் + தொகையே           ஆ)எண்தொகை + யே
இ)என்+ தொகையே              ஈ) எட்டு+ தொகையே
3.        விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
                    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருகஎன உரைத்தல்
                    எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
                    போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
                    ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

1.   இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
)காசிக்காண்டம்              ஆ)கொய்யாக்கனி
இ)சிலப்பதிகாரம்                    ஈ) கம்பராமாயணம்
2.   இப்பாடலின் ஆசிரியர் யார்? 
)கம்பர்                                ஆ)இளங்கோவடிகள்
இ)கண்ணதாசன்                   ஈ) அதிவீரராம பாண்டியர்
3.   இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடியெதுகைகளை எழுதுக.
) விருந்தினனாகதிருந்துற    ஆ) விருந்தினனாகவியத்தல்
இ) பொருந்துஅருகுற                                  ஈ)பரிந்துநன் - முகமன்
4.  உரைத்தல்இலக்கணக்குறிப்புத் தருக.   
)எண்ணும்மை   ஆ)வினைமுற்று    இ)பெயரெச்சம்    ஈ)தொழிற்பெயர்
4.        உறங்குகின்ற கும்பகன்ன !   உங்கள் மாய வாழ்வெலாம் 
இறங்குகின்றது !  இன்று காண்;  எழுந்திராய் ! எழுந்திராய் !   
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய் , உறங்குவாய் ! இனிக்  கிடந்து உறங்குவாய் !
1.   இப்பாடலின் ஆசிரியர் யார்? 
)   கம்பர்                             ஆ)இளங்கோவடிகள்
இ) கண்ணதாசன்                  ஈ) அதிவீரராம பாண்டியர்
2.   இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?  
) காசிக்காண்டம்               ஆ) கொய்யாக்கனி
 இ) சிலப்பதிகாரம்                  ஈ) கம்பராமாயணம்
3.   இப்பாடலில்  இடம்பெற்றுள்ள சீர் மோனை சொற்களை குறிப்பிடுக. 
) உறங்குகின்ற - உங்கள்              ஆ) உறங்குகின்ற - இறங்குகின்றது
இ) உறங்குகின்ற - உறங்குவாய்   ஈ) உறங்குவாய் - கிடந்து
4.   இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடியெதுகை சொற்களை எழுதுக .
) உறங்குகின்ற - உங்கள்         ஆ) உறங்குகின்ற - கும்பக்கன்ன
இ) உறங்குகின்ற - உறங்குவாய்   ஈ) உறங்குவாய் - கிடந்து
5.   ' மாய'   என்பதன் பொருள் தருக .  
)   திறமையான                   ஆ) பொய்யான
இ)  உண்மையான                 ஈ) நிறைவான
5.        வண்மையில்லை யோர்வறுமை  யின்மையால்
 திண்மையில்லை  நேர்செறுந  ரின்மையால்
 உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்
 வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்
1.   இப்பாடலின் ஆசிரியர் யார்? 
)   கம்பர்                                       ஆ)இளங்கோவடிகள்
இ)கண்ணதாசன்                    ஈ) அதிவீரராம பாண்டியர்
2.   இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?  
)காசிக்காண்டம்                ஆ)கொய்யாக்கனி
 இ)சிலப்பதிகாரம்                   ஈ) கம்பராமாயணம்
3.   " வண்மை " என்பதன் பொருள் தருக.
)   கொடை                         ஆ)வலிமை
இ) வாய்ப்பு                             ஈ) திறமை
4.   " திண்மை "  என்பதன் பொருள் தருக. வலிமை
)   கொடை                          ஆ)வலிமை
இ)  வாய்ப்பு                            ஈ) திறமை
6.      " வண்ணமும் சுண்ணமும்  தண்நறுஞ் சாந்தமும்
பூவும்  புகையும்  மேவிய விரையும்
பகர்வனர்  திரிதரு  நகரவீதியும் 
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 
கட்டு நுண்வினைக் காருகர்  இருக்கையும் " .
1.   இப்பாடலின் ஆசிரியர் யார்? 
)   கம்பர்                                        ஆ)இளங்கோவடிகள்
இ)கண்ணதாசன்                    ஈ) அதிவீரராம பாண்டியர்
2.   இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?  
)காசிக்காண்டம்                ஆ)கொய்யாக்கனி
 இ)சிலப்பதிகாரம்                ஈ) கம்பராமாயணம்
3.  வண்ணமும் சுண்ணமும் - இலக்கணம் தருக  
)எண்ணும்மை                           ஆ)வினைமுற்று
இ)பெயரெச்சம்                      ஈ) தொழிற்பெயர்
4.   விரை என்பதன் பொருள்-
) மனம்           ஆ) மணம்         இ) உள்ளம்         ஈ) மேகம்
7.    " முதல்மழை விழுந்ததும்  மேல்மண் பதமாகிவிட்டது
       வெள்ளி முளைத்திடுது  , விரைந்து போ நண்பா !
       காளைகளை ஒட்டி கடுகிச்செல்,  முன்பு
       பொன் ஏர் தொழுது , புலன் வழிபட்டு
       மாட்டை பூட்டி  காட்டை கீறுவோம் " .
1.  இப்பாடலின் ஆசிரியர் யார் ? 
)   கம்பர்                                        ஆ) கு..ராஜகோபாலன்
இ) கண்ணதாசன்                            ஈ) அதிவீரராம பாண்டியர்
2.   இப்பாடல் இடம்பெறும் நூல் ?
) காசிக்காண்டம்               ஆ)கொய்யாக்கனி
இ) ஏர் புதிதா?                  ஈ) கம்பராமாயணம்
3.  விளிச்சொல்லை எழுதுக.   
) விழுந்ததும்     ஆ) தொழுது       இ) நண்பா                ஈ) கடுகிச்செல்
4.   "கடுகி " பொருள் காண்க 
) மனம்           ஆ) விரைந்து     இ) உள்ளம்         ஈ) மேகம்
8.     மாற்றம் எனது மானிடத் தத்துவம்
        மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
        எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
        என்ப தறிந்து ஏகுமென் சாலை
        தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
        தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்
1. இப்பாடலின் ஆசிரியர்
)பாரதிதாசன் ஆ) கண்ணதாசன்  இ)வாணிதாசன் ஈ) முடியரசன்
2. இப்பாடல் இடம்பெற்ற நூல்
)கோடை வயல்              ஆ) கண்ணதாசன் கவிதைகள் 
இ)தேம்பாவணி                          ஈ) மீட்சி விண்ணப்பம்
    3. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக
) மாற்றம்தத்துவம்                ஆ) மாறும் - மகத்துவம் 
இ) தீமை – நன்மை           ஈ) மாற்றம் – மாறும்
4. பொருள் தருக – மகத்துவம்
) நன்மை          ஆ) பெருமை      இ) ஏற்றம் ஈ) மாற்றம்

9.     நவமணி வடக்க யில்போல்
                   நல்லறப் படலைப் பூட்டும் 
தவமணி மார்பன் சொன்ன
                   தன்னிசைக்கு  இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
                   துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
                   ஒலித்து அழுவ போன்றே   
1. இப்பாடலின் ஆசிரியர்
)பாரதிதாசன்                   ஆ) கண்ணதாசன்        
இ) வீரமாமுனிவர்             ஈ) முடியரசன்
2. இப்பாடல் இடம்பெற்ற நூல்
)கோடை வயல்               ஆ) கண்ணதாசன் கவிதைகள் 
இ)தேம்பாவணி                ஈ) மீட்சி விண்ணப்பம்
 3. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக
)நவமணிதவமணி    ஆ)நவமணி - நல்லறப் 
இ)உவமணி - சுனைகள்     ஈ)படலை –மார்பன்
4. பொருள் தருக : படலை
) துன்பம்       ஆ) மாலை          இ) மலர்கள்         ஈ) வண்டு     
10.             பகர்வனர் திரிதரு நகரவீதியும்
        பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
        கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்
        தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
1.   இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?
)கோடை வயல்                   ஆ) கண்ணதாசன் கவிதைகள் 
இ)சிலப்பதிகாரம்                 ஈ) மீட்சி விண்ணப்பம்
2.   பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
)பட்டினும் – பருத்தி                 ஆ)பட்டினும் - கட்டு
இ)பகர்வனர் – திரிதரு           ஈ) பருத்தி - காருகர்
3.   இப்பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
)பட்டினும் – பருத்தி          ஆ)பட்டினும் - கட்டு
இ)பகர்வனர் – திரிதரு           ஈ) பருத்தி – காருகர்

4.   இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
)பட்டு - மயிர்                      ஆ)தூசு - துகிர்
இ)முத்து - பவளம்                  ஈ) ஆரம் - அகில்

No comments:

Post a Comment