GOVERNMENT SCHOOL RETTANAI APK.

Monday, April 20, 2020

10 TAMIL - உரைநடை சிறுவினாக்கள்

உரைநடை சிறுவினாக்கள்
1.  புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும்  அதில்  தலை வைக்க திண்டும் அமைத்தனர்.திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பது சில இடங்களில் காணமுடிகிறது. இப்படி, காலமாற்றம்  தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பது சில இடங்களில் மட்டுமே காணமுடிகிறது. அவர்களும் ஒருவழியில் உறவினர்களாக இருந்தால் மட்டுமே விருந்து. காலமாற்றம்,  பொருளாதார சூழல், விலைவாசி உயர்வு, கொள்ளை, கொலை முதலிய காரணங்கள் இன்று விருந்தோம்பல் பண்பு மாறுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆனால், அதற்கு மாற்று வழியாக பொது இடங்களிலும் திருத்தலங்களிலும் திருவிழாக்களின்போதும் விருந்தோம்பல் பண்பு இன்றும் தொடர்கிறது. வீடுகளில் நல் நிகழ்வுகள் நடைபெறும்போது மண்டபங்களில்  விருந்தோம்பல் செய்கின்றனர்.
2.   இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
Ø வாகனங்களை இயக்குவதற்கும் நிறுத்துவதற்கும் தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Ø அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இதுவே சுருக்கமான வழி என்று நமது திறன்பேசியில் உள்ள வழிகாட்டி வரைபடம் காட்டுகிறது.
Ø நமது திறன் பேசியோ, கணினியோ நாம் சொல்லச் சொல்லத் தன் அகண்ட தரவுகளில் உள்ள கோடிக்கணக்கான சொற்களுடன் ஒப்பிட்டுச் சரியான சொல்லைக் கண்டுபிடிக்கிறது.
Ø விடுதிகளில், வங்கிகளில் அலுவலகங்களில் தற்போது மனிதர் அளிக்கும் சேவையை ரோபோக்கல் அளிக்கின்றன.
Ø மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று  நினைக்கும் செயல்களையும் கூட கண்டுபிடிப்புகள் செய்து விடுகின்றன. இக்கண்டுபிடிப்புகள்  அனைத்தும் மனிதனை மேம்படுத்துவதாகவே அமைகின்றன.
3.   மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச , எழுத, சிந்திக்க இத்தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு 'எதிர்காலத் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் எழுதுக.
Ø எதிர்காலத் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவைக் கொண்டே செயல்படுத்தப்படும்.
Ø எந்த ஒரு தொழில்நுட்பமும் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. 1980களில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணமாயின.
Ø அறையின் மூலையில் நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புவதும்அந்த வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம், இதுவே சுருக்கமான வழிஎன்று நமது திறன்பேசியில் உள்ள வழிகாட்டி வரைபடம் காட்டுவதும் செயற்கை நுண்ணறிவாலேயே நிகழ்கின்றன.
Ø செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது. கண் அறுவை மருத்துவம் செய்கிறது. சமைக்கிறது. சில புள்ளிகளை வைத்துப் படம் வரைகிறது.
Ø எதிர்காலத்தில்ரோபோவிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்களை நாம் பார்க்கப்போகிறோம்.
4.   மெய்நிகர் உதவியாளர் குறித்து அறிவன யாவை?
Ø மெய்நிகர் உதவியாளர் என்பது, கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப்போல் திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள்.
Ø நாம் சொல்கின்றவர்களுக்கு இது தொலைபேசி விடுக்கும். நாம் திறக்குமாறு கட்டளையிடும் செயலியைத் திறக்கும்.
Ø எந்தக்கடையில் எந்தப்பொருள் விற்கும் எனச் சொல்லும்.
5.  உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
Ø நம் வாழ்வின் ஏணிப்படியான கல்வியைக் கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
Ø நம் தாய்த் தந்தை படிக்காததால் தான் நாம் இந்த வறுமைக்கு ஆளாகியுள்ளோம். நாம் படித்துவிட்டால் இந்த வறுமை இருக்காது.
Ø கல்வி கற்றால் மட்டுமே நம் வாழ்வில் வரும் பல துன்பங்களுக்குத் தீர்வு காண முடியும்.
Ø இந்தப் படிப்பை முடித்துவிட்டால் அடுத்து வரும் படிப்புகளை நீ வேலைக்குச் சென்று கொண்டே கூட படிக்கலாம்.
Ø எந்தச் சூழ்நிலையிலும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
6.  படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துக்கலை குறித்து இரண்டு   
வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
1.   மயிலாட்டம் என்றால் என்ன?
v நையாண்டி மேளம் இசைப்பர்.
v காலில் சலங்கை கட்டி மயில்போல் ஆடுவர்.
2. கரகாட்டம் என்றால் என்ன?
v தலையில் கரகச்செம்பு வைத்து ஆடுவர்
v கரகத்தில் கிளிபொம்மை வைத்து ஆடுவர்.
7.   தலையைக் கொடுத்தேனும் தலைநகர் காப்போம்    இடம் சுட்டிப் பொருள் தருக.
இடம்: சென்னையை ஆந்திராவின் தலைநகராக மாற்ற முயற்சி செய்தனர்
பொருள்: சென்னை, ஆந்திராவின் தலைநகராக மாற்ற கூடாது. மீறினால்,
                என்ன விலை கொடுக்கவும் தயார் என்பதே பொருள்.
விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும் பொழுது, சென்னை தமிழருக்கே                    உரிமையானது.

No comments:

Post a Comment