GOVERNMENT SCHOOL RETTANAI APK.

Tuesday, April 21, 2020

10 TAMIL - எட்டு மதிப்பெண் வினாக்கள்


 பகுதி – V
1.  தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரை குறிப்புகளை எழுதுக.
     காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கு இடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவாயினும், தமிழ்மட்டும் அதில் தலைச்சிறந்தது.

பயிர்வகைச் சொற்கள்  
     தமிழ்சொல்வளத்தைப் பலத்துறைகளிலும் காணலாம். ஆயினும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைத் தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி எனப் பல சொற்களில் தமிழர்கள் வழங்குகின்றனர். தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்குக் கவை, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு எனப் பல சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இலை, கொழுந்துகளின் பெயர்கள்
     தாவரங்களின் வகைகளுக்கும் பிரிவுகளுக்கும் ஏற்ப இலை, தாள், தோகை, ஓலை என்று பெயரிட்டு வழங்கினர். காய்ந்த இலையை சருகு எனவும் காய்ந்த தாளையும் தோகையையும் சண்டு என்றும் வழங்கினர்.
மேலும், தாவரங்களின் நுனிப்பகுதியை துளிர், தளிர், முறி, கொழுந்து, குருத்து, கொழுந்தாடை என்றும் வழங்கினர்.
பூ, பிஞ்சு, குலை
பூவின் பல்வேறு நிலைகளை அரும்பு, போது, மலர், வீ, செம்மல் முதலியப்பெயரால் வழங்கினர். பிஞ்சினை, பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, முட்டுக்குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல் முதலிய பெயரால் வழங்கினர். மேலும், குலைகளை கொத்து, குலை, தாறு, கதிர், அலகு, சீப்பு, குரல் முதலிய பெயரால் வழங்கினர்.
கெட்டுபோன காய்கனி, பழத்தோல், மற்றும் மணிவகை
     கெட்டுபோன காய்கனியைச் சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு முதலிய பெயரால் அழைப்பர். அதுபோலவே பழஙகளின் மேல் தோலையும் தொலி, தோல், தோடு, ஓடு, குடுக்கை, மட்டை, உமி, கொம்பை முதலிய பெயரால் அழைப்பர். மணி வகைகளை, கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை முதலிய பெயரால் அழைப்பர்.
இளம் பயறு வகை
     தாவரத்தின் இளம் பயறு வகையினை நாற்று, கன்று, குருத்து, பிள்ளை, குட்டி, மடலி, வடலி, பைங்கூழ் முதலிய பெயரால் அழைப்பர்.
2.  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
v சுந்தரனார், தாம் இயற்றிய மனோன்மணியத்தில்  கடலை ஆடையாக உடுத்திய பூமித்தாய், பாரத கண்டத்தை அழகிய முகமாகவும், தக்காணத்தை நெற்றியாகவும்,  தமிழகத்தை அந்த நெற்றியில்  வைத்த திலகமாகவும், அந்தத் திலகத்தின்  மணமாகத் தமிழையும்  உருவகப்படுத்திப் தமிழ்த்தாயின் சிறப்பைப் பாடியுள்ளார்.
v பெருஞ்சித்திரனார் தமிழை,  கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நின்று, நிலைத்து மண்ணுலகம் போற்ற வாழும் பேரரசி என்கிறார். முன்னைக்கும் முன்னையாய் முகிழ்த்த தமிழ் என்றார்.
v சுந்தரனார் அன்னைத் தமிழின் சீரிளமையைத்  திறம் வியந்து வாழ்த்துத்துகிறார்.
v பெருஞ்சித்திரனாரோ தமிழை, முன்னும் நினைவால் முடி தாழ வணங்கி வாழ்த்துவதாகக் கூறுகிறார்.
v இருவருமே தமிழ்த்தாயின் பெருமைகளைக் காலந்தோறும் உணர்ந்து போற்றியுள்ளனர்.  தமிழன்னைக்கு அணிகலன்களைப் பூட்டி அழகு
     பார்த்துள்ளனர்.
3.  ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப்  புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிபடுத்துவதாக  இருந்தது.  அது  இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
விருந்தோம்பல்
     தமிழரின் தொன்மை, வீரம் , கொடை முதலான பண்புகளில் ஒன்றாகும் விருந்தோம்பல் பண்பு.  நமது பண்பாட்டின் அடையாளமாகவும்  கணவரும் மனைவியும் ஆற்ற வேண்டிய கடமையாகவும்  விருந்தோம்பல் பண்பு  பண்டைய காலத்தில் கருதப்பட்டது.
இலக்கியத்தில் விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பது  விருந்தினரை உபசரித்து பாதுகாத்தல் ஆகும்.  போக்குவரத்து குறைந்திருந்த அக்காலத்தில் வணிகமுறையாக வருபவர்களுக்குப்  பசியை நீக்க உணவு கொடுத்து உபசரிப்பது விருந்து.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் இந்நான்கு நிலத்திற்கும் உரிய உணவு  முறைகளும் உபசரிப்பு முறைகளும் இக்காலத்தில் மாற்றம் பெற்றுள்ளன.  முன்னோர், புதியவர்களுக்கு உணவு வழங்குவதைக் கொள்கையாக கொண்டிருந்தனர்.  வள்ளுவரும் இன்முகத்தோடு பரிமாற வேண்டும் என்பார். மணிமேகலையும் அறத்திற்கு  எல்லாம் அறமாவது விருந்தோம்பல்  என்கிறது.  பத்துப்பாட்டில் 81 இடங்களில் விருந்து பற்றி பேசப்படுகிறது. 
விருந்தோம்பும் முறைகள்
விருந்தினரை முக மலர்ச்சியுடன் வரவேற்றல், உபசரித்தல், வாயில் வரை சென்று வழியனுப்புதல்வரை பல்வேறு நெறிமுறைகளைக் கடைப்பிடித்துள்ளனர்  நம் முன்னோர்கள்.  வள்ளல்கள்,  தம்மை நாடி வருபவரைத் தெய்வமாகக்  கருதி கடமைகளைச் செய்திருக்கிறார்கள்.  முரசுக் கட்டிலில் தூங்கிய  மோசிக்கீரனாரைத்  தகடூர் எறிந்த இரும்பொறை கவரி வீசிப் பணிவிடை செய்துள்ளான்.  அதியமான், அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து நெடுநாள் பாதுகாத்துள்ளான்.  அரசர்கள், வள்ளல்கள் மட்டுமல்லாமல் மக்களும் விருந்தினரைப் போற்றி பாராட்டியுள்ளனர். 


இன்றைய நிலையில் விருந்தோம்பல்
தற்போது  வணிகம் கருதியோ  பல்வேறு பணிகள் கருதியோ வெளியிடங்களுக்கும்  வெளிநாட்டிற்கும்  செல்பவருக்கு உணவகங்கள்,  தங்குமிடங்கள்,  சுற்றுலா விடுதிகள் போன்றவை இருப்பதால் விருந்து உபசரிக்க வேண்டிய தேவையில்லை.
4.  இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்ந்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
Ø பாண்டிய நாட்டை ஆண்ட குசேல பாண்டியன், கல்வியறிவு மிக்கவன் ' எனக் கற்றோர் கூறக் கேட்ட இடைக்காடனார், சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க தம் கவிதையை அப்பாண்டியன் முன் பாடிக்காட்டினார்.
Ø மன்னன், சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலவரை அவமதித்தான்.
Ø இடைக்காடனார், திருஆலவாயில் உறையும் இறைவன் முன் சென்று வணங்கி, “தமிழறியும் பெருமானே! அடியார்க்கு நல்நிதி போன்றவனே! திருஆலவாயிலில் உறையும் இறைவனே! அழகிய வேப்பமலர் மாலையை
Ø அணிந்த பாண்டியன், முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன் அவன் சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் என் புலமையை அவமதித்தான்.
Ø அவன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவமாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும், சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையும் அவமதித்தான் எனச் சினத்தோடு கூறினார்.
Ø இவ்வாறு உரைத்த இடைக்காடனார் கூற்றிற்குச் செவிசாய்த்து, இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்த இறைவன், தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியுடன் வையை ஆற்றின் தெற்கே ஒரு திருகோயிலை உருவாக்கி அங்குச் சென்று தங்கினார்.                                                                                                                                                                                                                                                                  
Ø இதனை அறிந்த மன்னன் யான் என்ன குற்றம் செய்தேன் ஏன் இங்கு எழுந்தருளினீர் என வருந்தினான்.
Ø இறைவன், இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர, வேறு எந்த குற்றமும் இல்லை என்றார்.
Ø தன் தவற்றை உணர்ந்த பாண்டிய மன்னன், இடைக்காடனாருக்கு மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்திச் சிறப்புச் செய்தான்.

5.  சிலபதிக்கார மருவூர்ப்பார்க்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக:
மருவூர்ப்பாக்க வணிக வீதிகளில்
v பூ,நறுமண பொருட்கள் விற்றனர்.
v பட்டு,பருத்தி நூல் ,பவளம்.முத்து விற்றனர்..
v தானியகடைகள் இருந்தன.
v ஏழு இசைகளை இசைத்தனர்.
v இறைச்சி விற்றனர்.
v உப்பு விற்றனர்.
v எண்ணெய் விற்றனர்.
v ஓவியர்,சிற்பிகள் இருந்தனர்.
v கைத்தொழில் பலரும் செய்தனர்.
இக்கால வணிக வளாகம்
v தரைதளம் ,மேல்தளம்  போன்றவற்றில் வணிகம் செயல்படுகிறது
v அங்காடிகளில் அனைத்து வகை பொருட்களும் விற்கின்றனர்.
v இணையத்திலும் வணிகம் நடைபெறுகிறது.
ஒப்பீடு
         இக்கால வணிகம் முற்கால வணிகத்தைவிட மேம்பட்டுள்ளது.
6. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைக் கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா ? இக்கருத்துகளை ஒட்டிச் 'செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்' பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
Ø மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழுந்து ஒட்டுதல் முதலிய மனித வேலைகளை செய்யச் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
Ø கட்டுரை எழுத, கவிதை பாட, மனிதனால் இயலாத செயல்களை செய்ய, ஆட்கள் இல்லாத வணிக கடைகள் நடத்த பயன்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்கள் மேல் பாசம் பொழியுமா அன்புடன் அக்கறை கொள்ளுமா என்ற கேள்விகளையும் எழும்பவே செய்கிறது.
செயற்கை நுண்ணறிவு புரட்சி
Ø செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகள் சந்தைப் பொருளாக உற்பத்தி செய்யப்பட்டாலும் அவை, சமுதாய பயன்பாட்டிற்கு உகந்ததாக இருப்பதையும் மறுக்க முடியாது.
Ø அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைக் கண்காணிப்புக் கருவி திருப்புவதும் போக்குவரத்து போக்குவரத்து நெரிசலை திறன் பேசினால் வரைபடமாக அறிய உதவுவதும் திறன்பேசியின் நம் சொல்லும் ஒளியை வாங்கி சரியான சொல்லிக் காட்டுவதும் மனிதர்களுடன் சதுரங்க முதலான விளையாட்டுகளை விளையாடுவதும் கண் அறுவை மருத்துவம் செய்வதும் சமைப்பதும் புள்ளிகளை வைத்து படம் வரைவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட புரட்சி என்றே கூறலாம்.
முன்னேற்றத்திற்கு உதவும் செயற்கை நுண்ணறிவு
Ø செயற்கை நுண்ணறிவு என்பது மனிதகுலத்தின் ஒவ்வொரு செயலுக்கும் மெய்க்காப்பாளராக அமையும்.
Ø ஆதரவற்றோருக்கு ஆதரவளிக்கும். சந்தை இல்லாமல் பொருளோ பொருள் இல்லாமல் வாழ்வு இல்லை. இவ்வகையில் மனிதகுலம் அர்த்தமான வாழ்வு வாழ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
Ø உயர்வான பனிமலைகள், மாளிகைகள், அடுக்ககங்கள் என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆட்சிசெய்யும்.
Ø வீட்டிலும் வெளியிலும் அலுவலகங்களிலும் ஆலயங்களிலும் மக்களின் பாதுகாப்புக்கு உதவும்.
Ø பயண நேரத்தை குறைப்பது, எரிபொருள் மிச்சப்படுத்துவது என மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்
பாசம் காட்டுமா செயற்கை நுண்ணறிவு
Ø மனித அன்பையும் பாசத்தையும் காட்ட தெரியாததனால்தான் அதனைச் செயற்கை நுண்ணறிவு என்கிறோம்.
Ø குழந்தைகளை முதியோர்களை பேணவும் பாசம் காட்ட தெரியாத ரோபோக்களுக்கு அவற்றை கற்றுக்கொடுக்க செயற்கை நுண்ணறிவு உதவும்.
7.  நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க .
Ø பேரன்பிற்குரிய அவையோர் அனை வருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை,  நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கிவரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்கத அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள்  இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்…….
Ø ஐம்பெரும் பூதங்கள் எவ்வாறு தோன்றின என்பது விரிவாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டுள்ளது. இச்செய்தி பிற சமய நூல்களின் கூற்றுகளோடும் வளர்ந்துள்ள அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளோடும் பெரிதும் பொருந்தி வருகின்றன
Ø அதாவது ஒன்றுக்கொன்று மாறிவரும் இயல்புடைய திங்களும் ஞாயிறும் அறிந்து, விண்ணுலகு வெறும் பாழாகிய பின்னர், அதுவும் கெட்டு ஒன்றுமில்லாமல் சிதைந்து ஒடுங்கிச் சில கழியும் அவ்வூழிகளின் பின்னர் அந்த தோற்றத்தின் பேரொலி கூழி கழிந்தது.
Ø தொடர்ந்து வானம் தோன்றி முதல் பூத ஊழியும் அவ்வானத்தினின்று தோன்றிய காற்று ஊழியும் அந்தக் காற்றினின்று தோன்றி ஒளிவீசிய தீ பூதத்தின் ஊழியும் அத்தீயினின்று பனியும் மழையுமாய் தோன்றிய நீர்ப் பூதத்தின் ஊழியும் கழிந்த பின்னர் நீரினுள் மூழ்கி மூழ்கி நெடுங்காலம் கழிந்த பின்னே, நிலமாகிய பூதம் அவ்வெள்ளத்தின் ஊடே பீடுபெற்று எண்ணிறந்த காலம் கழித்து பின்னர் இந்நிலத்தின் உயிர்கள் தோன்றின என்று பரிபாடலில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உலகும் உயிரினங்களும் உருவானதாக சுட்டிக் காட்டியுள்ளது
8. "அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெ ளிப் பயணம்" என்னும் தலைப்பில் கற்பனை க் கதை ஒன்று எழுதுக.
v மாலை நான்கு மணியிருக்கும் விண்கலம் செலுத்தும் இடத்தில் ஒரே பரபரப்பு. ஆறுமணிக்கு விண்கலம் விண்ணை நோக்கி புறப்பட இருக்கிறது. பொருத்தப்பட்ட நாற்சக்கர நாற்காலியில் ஓர் அசைவற்ற உருவம் வந்து கொண்டிருந்தது. அவரின் கண்களும் அந்த சக்கர நாற்காலியை பார்த்துக்கொண்டிருந்தன.
v விண்கலத்தில் பயணம் செய்பவர்களின் பட்டியலில் இஸ்ரோவில் விஞ்ஞானி மார்ட்டினும் இடம் பெற்றிருந்தார். விஞ்ஞானிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். சக்கர நாற்காலியும் விண்கலம் அருகில் வந்து சேர்ந்தது. நாற்காலியின் அசைவற்று அமர்ந்திருப்பவர் ஸ்டீபன் ஹாக்கிங் அவரோடு பயணம். அவரால் பேச முடியாது எப்படியிருக்குமோ பயணம் என ஒவ்வொருவரும் தத்தம் எண்ணத்தை ஓடவிட்டு இருந்தனர்.
v மனிதர்களை ஏற்றிக் கொண்ட விண்கலம், அடைக்கப்பட்டது. அது புறப்பட தயாரானது. விண்வெளி உடை அணிந்திருந்த எல்லோரும் தங்கள் அடையாளத்தை மாற்றி ஒரே உருவத்தில் இருந்தனர். வெப்பத்தை கக்கிக்கொண்டு விண்ணில் சீறிப் பாய்கின்றன விண்கலத்தில் புவியீர்ப்பு மையம் வரை சாதாரணமாக இருந்தது. அதைத் தாண்டிய போது எடை குறையும் உணர்வு எல்லோரிடத்திலும் ஏற்படுத்துகிறது.
v செயலற்ற உறுப்புகளைக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் பார்க்கிறார். அவரும் சக்கர நாற்காலியில் ஒட்டி போயிருந்தார் நாற்காலி மட்டும் பறந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் விஞ்ஞானி மார்ட்டின் அவரை நெருங்கி தொட்டார். ஸ்டீபனின் உணர்வு எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய சோதனை முறையில் தொட்டுப் பார்த்தார். உடனே கணினியில் நான் என்ன கவர்ச்சி நடிகையா தொட்டுப் பார்ப்பதற்கு என தட்டச்சு செய்து காட்டினார். எல்லோருக்கும் அவரை பார்த்து சிரித்தனர் அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வு கொண்டவர் அவர்.
v கருத்துளையினுள் செல்லும் எதுவும் தப்பித்து வர முடியாதாமே. ஆமாம். ஆனால், கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். கருந்துளை என்பது எப்போதும் கருப்பாக இருக்குமா? உண்மையில் கருத்துளை கருப்பாக இருப்பதில்லை. ஒரு கட்டத்தில் அதில் இருந்து கதிர்வீச்சு அணுத்துகள்கள் கசியத் தொடங்கி இறுதியில் வெடித்து மறைந்துவிடும். இப்படி பல வினாக்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தார்.
v புவியீர்ப்பு வட்டத்திற்கு மேலே செல்லச்செல்ல எடையற்ற தன்மையை எல்லோரும் உணர்ந்தனர். .. அதோ வின்ஸ்லோ பறந்து தலைகுப்புற வருகிறார். வாங்க…. ஒருவரோடு ஒருவர் நெருங்கி கைகோர்ப்போம் என முயற்சி செய்தனர். அதோகப்பில் இருந்து காப்பி மிதந்து வருகிறது. விடுங்கள் நான்பருகிக்கொள்கிறேன்.  நெருங்கி உரிஞ்ச காப்பி வாயின் வழியே செல்ல விளையாட்டு காட்டியது.
v விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சென்ற போது சில படங்கள் எடுத்துக் கொண்டனர். எல்லோருக்கும் பூமிக்கு திரும்ப நினைத்தனர். அதனால் விண்கலம் பாதுகாப்பு பாதுகாப்பாய் தரை இறக்கப்பட்டது. ஸ்டீபன் ஹாக்கிங் பயணத்தை மேற்கொண்டதன் நோக்கம் திரும்பி பூமிக்கு வந்தபின்தான்  தெரியவந்தது.
v பூஜ்ஜிய ஈர்ப்பு விசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்வதற்கே அவர் பயணப்பட்டிருக்கிறார்.  அவரோடு பயணம் செய்தது ஒரு மேதையோடு பயணித்த, புதிய அனுபவத்தை தந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானி மார்ட்டின் குறிப்பிட்டிருக்கிறார்.
9. நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் அவற்றின் ஒப்பனைகள் –    
    சிறப்பும் பழமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான
    காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன  - இவை
    குறித்து நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதுக.
முன்னுரை:
மனத்திற்கு இன்பம் தருவன நிகழ்கலைகள் .
     நிகழ்கலை வடிவங்கள்:
ஆடல்கள் , பாடல்கள் ,கதைகள் பழமொழிகள் விடுகதைகள் போன்றவை.
     நிகழும் இடங்கள்:
                   தெரு,தெருகோடி,முச்சந்தி போன்றவை.
    ஒப்பனைகள்:
                    ஆடை,அணிகலன்கள்,முக்கிய இடம்பெறும்.
    சிறப்பும் பழமையும்:      
அனைவராலும் விரும்பப்படும் கலை வாழ்வில் பிரிக்க முடியாத பண்பாட்டு கூறாகும்.
அருகுதல்:
தொழில்நுட்ப வளர்ச்சி ,திரைப்படம் ,தொடர் நாடகம்  முக்கிய காரணமாகும்.
மீளவழிகள்:
கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை:
ஊடகம் உதவி செய்தால் நிகழ்கலைகள் தலைநிமிரும் . பண்பாடு உலகமறியும்.
10. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவை    
     என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
      அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை
இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது. நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தரும். இன்றைய சூழலில் நாமும் எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்தல் வேண்டும்.
அரசியல் அறம்
நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. இன்று ஆட்சி செய்யும் அரசும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும்.
போர் அறம்
தமிழர் போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். இன்று நாடுகளுக்கிடையே நடைபெறும் நேரடி மற்றும் மறைமுக போரில் அறம் பின்பற்றப்படுவதில்லை தன் கொள்கைக்காக மனித உயிர்கள் கொள்ளப்படுகின்றன  இவை தவிர்க்கப்பட வேண்டும்.
கொடை அறம்
வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. இன்று உறவினர்களுக்குக் கூட கொடுக்கும் தன்மை குறைந்துவிட்டது. தம்மால் இயன்றவற்றை மற்றவர்களுக்கு கொடுக்கும் குணத்தை வளர்த்துக் கொள்வது அவசியம்.                                                        
உதவி
பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த அறமாக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இன்று பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வெகுவாகவே குறைந்து விட்டது. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும் சமூக உறுப்பினனாகவும் இயங்குவதற்கும் அவனது பண்பு நலனைக உருவாக்குவதற்கும் உதவுகிறது.
11.   சங்க இலக்கியங்கள் கூறும் தமிழரின் கொடைத்திறம் பற்றிய கருத்துக்களை   
        எழுதுக.
முன்னுரை
வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. தன் மகிழ்ச்சியை
மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவது தான் உண்மையான மகிழ்ச்சி.
செல்வத்தின் பயன்
தான்பெற்ற செல்வத்தின் பயன் மற்றவருக்கு கொடுப்பதுதான் என்கிறார் நக்கீரர்.
‘செல்வத்தின் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே’ (புறநானூறு)
கொடையின் சிறப்பு
கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது, பழந்தமிழர் கொடை
மாட்சியைப் புலப்படுத்துகிறது. கடையெழு வள்ளல்களின் கொடைப் பெருமை
சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்தரனார் பாடலிலும் பதிவு
செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை
இலக்கியங்களாகவே உள்ளன. பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப்
பதிவாகவே உள்ளது. அரியனவற்றை தயங்காது கொடுத்தலும் அதனால் ஏற்படும்
இழப்புக்கு வருந்தாமல் கொடுத்தலும் கொடைப் பெருமைகளாக கூறப்படுகின்றன.
வள்ளல்கள் “இல்லோர் ஒக்கல் தலைவன்” “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்பட்டனர்.
கொடையில் சிறந்தோர்
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார்.
இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச்
சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார். பேகன் மறுமை நோக்கி
கொடுக்காதவன் என்கிறார் பரணர். தன்னை நாடிவந்த பரிசிலன் பொருள் பெறாமல்
திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன்
வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும்
கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.
அக இலக்கியத்தில் கொடை
புற இலக்கியங்களில் மட்டுமன்றி அக இலக்கியங்களிலும் ஈதல் பற்றிய செய்திகள்
இடம்பெற்றுள்ளன. இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல்
மேலானது என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.
முடிவுரை
வல்லல்கள் மட்டுமன்றிப் புலவர்களும் ஈந்து மகிந்ததை இலக்கியங்கள் பதிவு
செய்துள்ளது .
12.  அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பெருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதை கொண்டு விவரிக்க.
அன்னமய்யாவின் கண்களில் வாலிபன்
அந்த வாலிபன் தற்செயலாக அந்தப் பக்கம் வந்த அன்னமய்யாவின்  கண்களில்
பட்டான்.  அருகில் சென்று பார்த்தபோதுதான் அவன் ஒரு வாலிபன் என்று
தெரிந்தது. கால்களை நீட்டி புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை
நெருங்கி போய் பார்த்தான் அன்னமய்யா.  பசியால் வாடிப்போன அந்த முகத்தில்
தெரிந்த ஏக்கப்பார்வை கவனிக்கக் கூடியதாக இருந்தது.  அன்னமய்யாவைப்
பார்த்ததும் அவன் ஒரு சிறு புன்னகை காட்டினான்.  தன்னைப் பார்த்து ஒரு
புன்னகை காட்டிய அந்த வாலிப மனிதரிடம் போய்,  அருகில் நின்று வாய்
திறக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். 
மயக்கம் தெளிவித்த மனிதநேயம்
வாலிபன் குடிக்க தண்ணீர் கிடைக்குமா என்று அவனைக் கேட்பது போல
பார்த்தான். அதைப் புரிந்துகொண்ட அன்னமய்யா, ஒரு வேப்பமரத்தின் அடியில்
இருந்த மண் கலயங்களில் ஒரு களையத்தை எடுத்தான். அந்த களையத்தில்  கஞ்சி
நிரப்பப்பட்டிருந்தது. அந்த கஞ்சியை எடுத்து  சிரட்டையில் ஊற்றி கொடுத்தான்.
கஞ்சியை உறிஞ்சி குடித்தாள் வாலிபன்.  கண்கள் சொருகின.  தொண்டை வழியாகக்
கஞ்சி இறங்கும் சுகத்தை முகம் சொல்லியது. கலயத்தில் இருந்த கஞ்சியைச் சிரட்டை
வழியாக மடக்கி மடக்கி உறிஞ்சி குடித்தான். அவன் உயிர் ஊற்று பொங்கி
நிறைந்தது.  அப்படியே அந்த வேப்பமரத்தின் நிழலிலேயே தூங்கிவிட்டான்.
 கண் விழிக்கக் காத்திருந்த அன்னமய்யாநீச்சு தண்ணீர் குடித்த மனநிறைவோடு மரத்தின் நிழலில்  தூங்கிய வாலிபனுக்கு  எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ  அதைவிட மேலான ஒரு நிறைவு அன்னமய்யாவிற்கு  ஏற்பட்டது.  மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பது போல அவனை ஒரு தடவை பிரியத்தோடு பார்த்து காத்திருந்தான் அன்னமய்யா.  சிறிது நேரத்துக்குப்பின்  உறக்கம் களைந்து வாலிபனிடமிருந்து நன்றி கலந்த புன்னகை வெளிப்பட்டது.
அன்னம் வழங்கி அன்னமய்யா
அன்னமய்யா, அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு தன்னுடைய நண்பன் சுப்பையாவின் புஞ்சை நிலத்துக்கு சென்றான். அங்கு அருகு எடுத்துக் கொண்டிருந்தவர்கள் மணி என்கின்ற அந்த வாலிபனை வரவேற்று அமரச் செய்தார்கள். எல்லோரும் சாப்பிடுவதற்கு தயாரானார்கள்.  வாலிபனின் கையில் ஒரு கால் உருண்டை கம்மஞ்சோறு வைத்தனர்.  கடுமையான பசியால் அவன் அரை உருண்டைவரை சாப்பிட்டு முடித்தான். அனைவரும்  ஓய்வெடுத்துக்கொண்டே   ஊர் கதைகளைப்  பேச,  மணி என்ற அந்த வாலிபனும் திரும்பவும் படுத்து அமைதியாக கண்களை மூடி உறங்கினான்.
   அன்னமய்யா பெயர் பொருத்தம்
பலரும் சென்றுவரும் அந்த பாதையில் அன்னமய்யா மட்டுமே அவனைப் பார்த்து இறக்கப்பட்டு அவனுக்கு உணவு கொடுத்து,  உயிரைக் கொடுத்தான்.   வாலிபன்  உறங்கத் தொடங்கும்முன் அன்னமய்யாவின்  பெயரைக் கேட்டு தெரிந்துக் கொண்டான்.  அந்த பெயரை மனதில் திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்தான். அன்னமிட்ட கைகளுக்குச் சொந்தக்காரரின் பெயர் அன்னமய்யா!  என்ன ஒரு பொருத்தம் என்று நினைத்துக்கொண்டான்.
13. ‘கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றேஎன்கிறார் வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து  பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கரையைப் பற்றிய உங்கள் கருத்துகளை விவரிக்க.
v வரலாறு என்பது எத்தனையோ நிகழ்வுகளை கொண்டதாக இருக்கிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்ந்து வந்ததோடு சரி, சிலர்தான் வரலாறு படைக்கிறார்கள். இவ்வாறிருக்க கல்வி என்றால் என்ன என்று தெரியாத ஒரு இருண்ட சமூகத்தில், ஒற்றை சுடராக தோன்றி ஓராயிரம் லட்சம் சுடராக விளங்கியவர்தான் மேரி என்பவராவார்.
v மேரி, தன் அம்மாவுடன் பெண் வில்சனுடைய மாளிகைக்குச் செல்கிறார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அழைப்பை ஏற்று அவர்களோடு விளையாடுகிறார். அங்கே ஒரு புத்தகம் அவள் கண்ணில் படுகிறது. அந்தப் புத்தகத்தின் மேல் ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அதை தன் கையில் எடுத்துக் கொள்கிறார். அதை புரட்ட தொடங்கியபோது வில்சனின் குழந்தைகளில் ஒரு சிறுமி புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொள்கிறது. நீ இதை எடுக்கக்கூடாது உன்னால் படிக்க முடியாது. புத்தகங்கள் படிக்க முடியாதவர்களுக்காக இல்லை தெரிந்துகொள். என்று சொல்லி மேரியை ஒதுக்குகிறாள், அதுவே மேரியின் மனதிற்கு ஒருவித வலியை ஏற்படுத்துகிறது.
v பெண்ணின் வீட்டில் நடந்த நிகழ்வை எண்ணி கண்ணீர் விடுகிறாள் மேரி.  அந்நிகழ்வே  மேரிக்கு படிக்கவேண்டும் என்ற தாகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நான் படிக்கவேண்டும். நான் படிக்கவேண்டும் என முனுமுனுத்துக்கொண்டே இருந்தாள்.
v மேரி தன் தந்தையான ஷ்யாமிடம் நான் பள்ளிக் கூடத்துக்கு போகமுடியாதா அப்பா? என்று தன் விருப்பத்தை தெரிவிக்கிறார்.  மேரி செல்வம், இங்கே நமக்கென்று பள்ளிக்கூடமே கிடையாது என்று அப்பா தளர்ந்த குரலில் பதில் கூறுகிறார். காரணம் அந்த ஊரில் வெள்ளைக்காரர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்ககூடிய பள்ளி இருந்தது. இருந்தாலும் அவள் நான் படிக்க விரும்புகிறேன் நான் படிக்க விரும்புகிறேன்  என்ற ஒரே வித்தியாசத்தைப் பற்றி மட்டுமே தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
v பதினோரு வயது ஆன சிறு பெண் மேரி, வயலிலிருந்து வீட்டை நோக்கிச் சென்று அந்த கனமான பருத்தி மூட்டையைத் தமது முதுகில் இருந்து கீழே இறக்கி வைக்கிறார். அப்போது தனக்கு முகம் தெரியாத ஒரு பெண் தன் முன்னால் நிற்பதை காண்கிறார். அந்தப்பெண் புன்னகை பூத்தபடி நான்தான் வில்சன் உன்னை போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். இந்த பருத்தி எடுப்பு வேலைகளை முடித்து உடனே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அளவு சீக்கிரமாக வர வேண்டும் சரியா? மேரி குட்டி, நீ வருவாய் தானே என்று வில்சன் பேசியதை கேட்ட மேரிக்கு பதில் சொல்ல நா எழவில்லை. வியப்பில் வாயடைத்து நின்றாள். வாய்ப்பு வந்தது வாசிக்க புறப்பட தயாரானாள்.
v மேரி படிக்கத் தொடங்கினாள் அவள் புதிது புதிதாக கற்றுக் கொள்ளத் தொடங்கினாள். தன் பாதை மெதுவாக உயர உயர போவதை உயர்ந்தாள்.  பள்ளியில் படிப்பில் இறுதி சான்றிதழ் பெற்றாள்  அது அவள் படிப்பினை மேலும் தொடர உதவும் என உணர்ந்தாள்.
v நல்லெண்ணம் படைத்த ஒரு வெள்ளையின மனிதரின் உதவியால் நகருக்கு சென்று உயர்கல்வியும் பெற்றாள். பருத்திக் காட்டில் பணிபுரிந்த மேரி பட்டதாரி ஆனாள். அவள் கருப்பின முதல் பட்டதாரி பெண். உனக்கு படிக்க தெரியாது என்ற வசை மொழிகளால் அவள் சாதித்தாள்.
(அல்லது)
புதிய நம்பிக்கை
முன்னுரை:
     பருத்திக்காட்டில் வேலைசெய்யும் கருப்பர் இனத்தவராகிய பாட்ஸி, சாம்  இணையர் படிப்பறிவற்றவர்கள் ஆவார்கள். இவர்களின் குடும்பத்தில் முதல் கல்வியறிவு பெற்றவர் இளைய மகள் மேரியே ஆவாள். மேரி கல்வி கற்பதற்கான சூழல் ஏற்பட்ட நிகழ்வை இக்கதையில் காணலாம்.
பருத்திக்காட்டில் மேரி:
    பருத்திக் காட்டில் தன் பதினொரு வயதுவரை பருத்திப் பயிரிடும் பருவம், பருத்திச் செடி வளரும் விதம், அறுவடைக் காலம் முதலியவற்றை மட்டுமே அறிந்து வளர்ந்தவள் மேரி.  செடி வளர்ப்பதில் கவனத்தோடு இருக்கும் மேரி, அவ்வப்போது தன் குடும்பத்துடனும் மகிழ்ச்சியாக இருப்பாள்.
மேரியின் மனவருத்தம்:
    ஒருநாள் தன் அம்மாவுடன் வெள்ளையர்கள் வசிக்கும் வீட்டிற்குச் சென்றிருந்தாள். அங்குள்ள குழந்தைகள் இவளை விளையாட அழைத்தனர். இவள் அவர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளாகத் தொட்டுப்பார்த்து மனம் மகிழ்ந்தாள். இவள் அதே முனைப்புடன் அருகிலிருந்த ஒரு புத்தகத்தைத்  தொட்டபோது  ஒரு குழந்தை, நீ அதை எடுக்கக்கூடாது; உன்னால் படிக்க முடியாது என்று கூறி, அப்புத்தகத்தை தட்டிவிட்டாள்.

புதிய நம்பிக்கை
    முதல் முறையாக தன் படிப்பு பற்றி, தன் பெற்றோரிடம்  பேசிய மேரி, அது கிடைப்பது அரிது என்று உணர்ந்தபோது மிகவும் மனவருத்தமுற்றாள். இருப்பினும் வெள்ளைக் குழந்தைக் கூறிய அச்சொற்களால் தன் இயல்பான செயல்பாடுகளைச் செய்யாமல் வருத்தத்தோடு இருந்தாள். ஒருநாள் மிஸ் வில்சன் என்ற ஆசிரியர் ஒருவர் பருத்திக்காட்டுக்கு வந்து மேரியைப் பள்ளிக்கு வரச்சொல்லி அழைத்தபோது மிகவும் மன மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று தன் படிப்பை கவனத்துடன் படித்து முடித்தாள். மீண்டும்  மிஸ் வில்சன் உதவியுடன் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தபோது அந்த ஊரே அவளை இரயில் நிலையம் வரைச் சென்று வழிஅனுப்பிவைத்தது.
முடிவுரை
     தனக்கு படிப்பு கிடைக்காததன் பின்னணியை உணர்ந்த மேரி  தன்னைப்போன்ற கருப்பர் இனத்து குழந்தைகள் படிப்பதற்காக ஒரு பள்ளியைக் கட்டி அவர்களுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கினாள்.
14. “பாய்ச்சல்” கதை உணர்த்தும்  கருத்துகளைத் தொகுத்து எழுதுக .
v பாய்ச்சல் – கலை நுட்பத்தை உணர்த்துகிறது.
v தெருக்களில் தினந்தோறும் ஆட்டம் ஆடுவர்.
v ஒருநாள் அனுமார் வேடம்.
v அனுமார் சைகைகள் அனைத்தும் இடம்பெற்றன.
v பார்த்தவருக்கு மகிழ்ச்சி.
v தானும் அவ்வாறே ஆடினார்.
v உண்மைக் கலைஞனின் உழைப்பு வெற்றி பெற்றது.
v கலைஞன் “ வேறு கலைஞனை உருவாக்குவதே கலையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த உதவும் என்பதை பாய்ச்சல் காட்டுகிறது.
15. “மங்கையராய்ப் பிறப்பதற்கே” என்ற கூற்றிற்கு ஒப்பான பெண்மணிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை சொந்த நடையில் எழுதுக.
முன்னுரை:
“மங்கையராய்ப் பிறப்பது தவம்” அவ்வாறான தவப்புதல்விகளைக்  காண்போம்.
எம் எஸ் சுப்புலட்சுமி
      தன் இசைத்திறனால்  அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
பால சரஸ்வதி
      பரதநாட்டியம் ஆன்மிக பட்டறிவை வளர்க்கும் என்றவர் “ஜன கன மன” நம்
நாட்டு பாடலுக்கு ஆடியவர்.
ராஜம் கிருஷ்ணன்
      புதினத்தை புதிய பார்வையில் பார்த்தவர். சமூகச்சிக்கல்கள் இவரது கதைகரு.
கிருஷ்ணம்மாள்
      இந்திய விடுதலைக்காக பூதான இயக்கத்தில் இணைந்தார்.
சின்னப்பிள்ளை
      படிக்காத இவர் மாற்றுத் திறனாளிகளுக்கு  உதவினார்.
முடிவுரை
      பெண்கள் நாட்டின் கண்கள்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகும்.
1.  பாநயம் பாராட்டுக. 
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
       தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
       உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
       மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
       தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே
-      . நமச்சிவாயர்.
(வினாவிற்கு தகுந்தாற்போல் நயங்களைத் தெரிவு செய்து எழுதுக)
                             பொருளடக்கம்
                   முன்னுரை
திரண்டகருத்து,        மையக்கருத்து
மோனைத்தொடை, எதுகைத்தொடை
இயைபுத்தொடை,   முரண் தொடை
சொல்நயம்,              அணிநயம்
சந்த நயம்,                சுவை நயம்
கற்பனை நயம்,        தலைப்பு
                   முடிவுரை
                
                
                
      





முன்னுரை
       ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
       உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே” – முதலிய பொருள் சுவை மிக்க வரிகளை உடைய இப்பாடலின் நயத்தினை இப்போது காண்போம்.

திரண்ட கருத்து                       செந்தமிழ் மொழியே!
தேனைக்காட்டிலும் இனிமையான செந்தமிழ் மொழியே! தென்னாடாகிய தமிழ்நாடு உலகம்முழுதும் தெரியுமாறு திகழும் தென்மொழி மொழியே!  என் உடலைக் காட்டிலும் ஒளிர்கின்ற ஒளிபொருந்திய சிறப்புமிகு தமிழே! நல்லுணர்வால் உணரப்படும் மொழியே! வானைவிட ஓங்கிய வள்ளல் தன்மை பொருந்திய மொழியே! மாந்தருக்கு இரு கண்களாகாக் கருதப்படும் மொழியே! என்றும் தனித்து நின்று அரசாலும் தனித்தமிழ் மொழியே! உன்னை வாழ்த்துகிறேன்.
மையக்கருத்து
       செந்தமிழ் மொழியின் சிறப்புகளை கா. நமச்சிவாயர் அழகாக எடுத்துரைக்கிறார்.
மோனைத் தொடை
       அடிதோறும் சீர்தோறும் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனைத்தொடை ஆகும்.
அடி மோனை
                சீர்மோனை
             
                    -
தேனினும்தென்னாடு- திகழுந்தென்
ளிர்வுறும்- ண்டமிழ் - ளிர்தமிழ்
வானினும்- ண்டமிழ் - யங்குநன்
தானனி- னித்தமிழ்
எதுகைத் தொடை
       அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத்தொடை ஆகும்.
               அடி எதுகை
               சீர் எதுகை
  தேனினும்
  னினும்
  வானினும்
  தானி
      ர்வினுக் - குர்வதாய்
இயைபுத் தொடை
       அடிதோறும் சீர்தோறும் இறுதி எழுத்து அல்லது சொல்  ஒன்றி வருவது இயைபுத்தொடை ஆகும்.


              அடி இயைபு
             சீர் இயைபு
  மொழியே என்னும் சொல்      
  அடியியைபாக வந்துள்ளது.
  மொழியே என்னும் சொல்
   சீரியைபாகவும் வந்துள்ளது.

சொல்நயம்
       ஆசிரியர் இப்பாடலை எளிய, இனிய, கலைச்சொற்களைக் கொண்டு சொல்நயம் தோன்ற எழுதியுள்ளார்.
அணி நயம்
       `ஆசிரியர் இப்பாடலை இயல்புநவிற்சி அணியால் அழகுற எழுதியுள்ளார்.
சந்த நயம்
       பாவின் ஓசையும் தாளமுமே சந்தமாகும். அவ்வகையில் ஆசிரியர் இப்பாடலை அகவலோசைத் தோன்றும் படி சந்தநயதோடு எழுதியுள்ளார்.
சுவை நயம்
       ஆசிரியர் இப்பாடலை பெருமிதசுவைத் தோன்ற எழுதியுள்ளார்.
முடிவுரை
       ஆசிரியர் இப்படலை மோனை நயம், எதுகை நயம், இயைபு நயம், அணிநயம், சந்த நயம், சுவை நயம் முதலிய நயங்கள் தோன்ற அழகுற பாடியுள்ளார்.
2.   நயம் பாராட் டுக.
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கங்கணும்
ஓட்டி மகிழ்ந்வோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர்வண் டு
பாடுவதும் வியப்போ?
திரண்ட கருத்து
நிலவு, விண்மீன், காற்று ஆகியவற்றை ஒரு நேர்க்கோட்டில் வைத்து, அதன் அமுத அழகைக் குடித்ததுபோல கோலவெறி படைத்தோம். அங்கும் இங்கும் எங்குமாக உலவும் மனமென்னும் பறவையினை எங்கும் ஓட்டி மகிழ்ந்திருவோம். இனிய பலாவின் சுளைகள் நிறைத்து வைக்கப்பட்ட வண்டியில் அதன் சுவையைப் ஒரு வண்டு பாடுவது வியப்போ?
மோனை நயம்
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.
அடி மோனை          சீர் மோனை
நிலாவையும்               குலாவும்
நேர்ப்பட                    குழம்பைக்
குலாவும்                     குடித்தொரு
கோ                        
எதுகை நயம்
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
அடி மோனை          சீர் மோனை
நிலாவையும்               வாத்து
குலாவும்                     மீனையும்
லாவும்                    லாவும்
லாவின்                    புள்ளினை
இயைபு நயம்
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் இறுதி எழுத்து ஒன்றி வருவது இயைபு எனப்படும்.
அடி மோனை          சீர் மோனை
       படைத்தோம்              நிலாவையும்
மகிழ்ந்வோம்            மீனையும்
                                    காற்றையும்
அணி நயம்
இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.
கட்டுரை - குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.
1.   தமிழ் இலக்கியவளம் - கல்வி மொழி- பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்- அறிவியல் கருத்துகள்பிறதுறைக் கருத்துகள்தமிழக்குச் செழுமைமேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
முன்னுரை
                 அறிவு என்பது  பொதுவுடைமை. அது இந்த மொழிக்கே உரியது என்று கூறிவிட முடியாது. அவ்வகையில் பலமொழிகளில் காணப்படுகின்ற அறிவுக்களஞ்சியங்களாகிய  இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அழகு சேர்ப்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்!
தமிழ் இலக்கியவளம்
உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ். அது இன்றளவும் செம்மையாக விளங்கி வருகிறது. அதற்கு அதன் இலக்கிய வளமே காரணமாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள் தொடங்கி  இக்கால இலக்கியங்கள் வரையில் தமிழில் எண்ணிக்கையில் அடங்கா இலக்கியங்கள் உள்ளன.
பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்
ஒரு மொழியில் தோன்றிய இலக்கியங்கள் அம்மொழியில் மட்டும் இருந்துவிடின் சிறப்பில்லை. அவ்விலக்கியங்கள் பல்வேறு நாட்டு மக்களையும் சென்றடையும்போதுதான் மேலும் அது சிறப்படைகிறது. ஜெர்மன் மொழியில், மொழி பெயர்ப்பின் மூலம் அறிமுகமான ஷேக்ஸ்பியர் இந்நாட்டு படைப்பாளர்களைப் போலவே கொண்டாடப்படுகிறார். நேரடி மொழிபெயர்ப்பாக பிரெஞ்சு, ஜெர்மனி, அமெரிக்கா, லத்தீன் முதலான நாடுகளில் நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன
கல்வி மொழி
மொழிபெயர்ப்பை ஒரு கல்வியாக ஆக்குவதன் மூலம், அனைத்து உலக அறிவையும் நாம் எளிதாக பெறமுடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வெளிநாட்டவரை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே வேண்டிய அனைத்தையும் தமிழ் மொழியில் சொல் வளத்தைக் கொண்டு உருவாக்கிக் கொள்ள முடியும். மனிதவளம் முழுமையாக பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்பு தளத்தை விரிவாக்க முடியும். நாடு, இனம், மொழி எல்லைகளை கடந்து ஓர் உலக தன்மையை பெறமுடியும். பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் பிற மொழிகளின் இலக்கியங்களை மொழி பெயர்ப்பின் மூலம் எளிதில் பெற முடியும்.
அறிவியல் கருத்துகள்
      ஒரு சிறு நாட்டில் உள்ள ஒருவர் ஒரு புதிய அறிவியல் கண்டுப்பிடிப்பை நிகழ்த்துவார். அது மனித குலத்திற்கு அவசியமான ஒன்றாக மாறும். அது பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கும்போதுதான் எல்லோருக்கும் பயனளிக்கும். அவ்வகையில் இன்று மொழிபெயர்ப்பின் மூலம் எண்ணிலடங்கா அறிவியல் கருத்துக்கள்  தமிழ்மொழியில் காணப்படுகின்றன.
பிறதுறைக் கருத்துகள்
மொழிபெயர்ப்பு மனிதர்களையும் நாடுகளையும் காலங்களையும் இணைக்கின்ற நெடுஞ்சாலையாக இருக்கிறது. காலத்தால், இடத்தால், மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது. இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியன வேற்று மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிபேசும் மக்களிடமும் சென்றடைகிறது. உலகமொழி பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
தமிழக்குச் செழுமை
      தமிழ் இன்று செழுமையான மொழியாக இருபதற்குக் காரணம் அது கணினி மொழியாக உள்ளதும் மொழிப்பெயர்ப்புகள் மிகுதியாக உள்ளதுமே காரணங்கள் ஆகும்.
முடிவுரை
      இன்று மொழிபெயர்ப்புக் கலையானது செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் அமைந்து நம் தமிழருக்கும் அது பெருமை சேர்க்கிறது.

2. உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வைக் குறிப்புகள் கொண்டு கட்டுரையாக்குக.
(முன்னுரை - இனிய காட்சி – பல்துறை அரங்குகள்  – விளையாட்டு அரங்குகள் – உணவு அரங்குகள் – விளையாட்டு பொருட்கள்)
முன்னுரை:
எங்கள் ஊர் திருவக்கரை. அங்குள்ள வக்கிரகாளியம்மன் பௌர்ணமி சிறப்பு பூசையையொட்டி ஒருவாரம் அரசு பொருட்காட்சி நடைபெறும்.
இனிய காட்சி :
வக்கிரகாளியின் முகப்பு வாயிலில் பொருட்காட்சி அமைக்கப்பட்டது . குடும்பத்தோடு காலையில் சென்றோம்.
பல்துறை அரங்குகள் :
பல்துறை அரங்குகள் வண்ண ஒளிவிளக்குடன் அமைக்கப்பட்டு இருந்தது.
விளையாட்டு அரங்குகள்:
 விளையாட்டு அரங்குகளில் , விளையாட்டு பொருட்கள் வாங்கினோம்.
முடிவுரை:
பொருட்காட்சியை கண்டு மகிந்தோம். நீங்கா நினைவுகள் மனத்தில் மலர்ந்தது.
3.முன்னுரை
      அன்னை மொழியே! அழகாய் அமைந்த செந்தமிழே! என்றும் எழில்சேர் கன்னியாய் திகழும் உனக்கு பேரிலக்கியத்துடன் சிற்றிலக்கியமும் படைத்தோர் பலர்! உமக்கு பெருமை சேர்க்கும் அச்சிற்றிலக்கியங்களுள் சிலவற்றை இக்கட்டுரையில் காண்போம்!
பிள்ளைத்தமிழ்
       போற்றுவதற்குத் தகுதிவாய்ந்த கடவுளரையோ, மன்னரையோ, மக்களுள் சிலரையோ பாட்டுடைத்தலைவராகக் கொண்டு, அவர்களைக் குழந்தையாகப் பாவித்து அவர்களின் மீது பத்து பருவங்கள் அமைத்து பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். தமிழில் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், பாவேந்தர் பிள்ளைத்தமிழ் முதலியன சிறந்த பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.
சதகம்
       நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் ஆகும். திருச்சதகம், அறப்பளீசுவர சதகம் முதலிய சதகங்களைத் தமிழுக்குச் சமைத்துள்ளனர்.
பரணி
       போரிலே ஆயிரம் யானைப்படை வீரர்களைக் கொன்றவனுக்குப் பாடுவது பரணி ஆகும். இது தோற்ற நாட்டின் பெயராலோ மன்னனின் பெயராலோ பாடப்படும்.
பரணி இலக்கியங்களுள் கலிங்கத்துப்பரணி காலத்தால் முற்பட்டது.
கலம்பகம்
       கலம் + பகம் = கலம்பகம், (கலம்பன்னிரண்டு; பகம்ஆறு) பதினெட்டு உறுப்புகளைக் கொண்டு பாடப்படுவது கலம்பகம் ஆகும். நந்திக்கலம்பகம் காலத்தால் முற்பட்டது.
உலா
       பவனி வரும் (உலா) பாட்டுடைத் தலைவனைப் பற்றியும் எழுவகை மகளிரும் அவன்மீது காதல் கொள்வதையும் பாடுவது உலா ஆகும். உலா பாடுவதில் ஒட்டக்கூத்தர் சிறந்தவர்.
அந்தாதி
       அந்தம் ஆதியாகத் தொடுப்பது அந்தாதி ஆகும். அதாவது, ஒரு பாடலின் ஒரு அடியின் இறுதி அடுத்த அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.
முடிவுரை
                 தமிழ்மொழியை அன்னையாகப் பாவித்து, அத்தமிழன்னைக்குப் பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை அணிவித்து  சிற்றிலக்கியங்களையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகு கூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் தமிழ்ச்சான்றோர்கள். அவ்வழியில் நாமும் சென்று தமிழ்ப்பயிரைப் பேணி வளர்ப்போம்!
4.விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் (01.07.1961 – 01.02.2003)
முன்னுரை
       விண்வெளிக்கு பயணம் சென்ற இந்திய பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லாவின் பெருமைப் பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்!
பிறப்பும் கல்வியும்
       கல்பனா சாவ்லா அவர்கள் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் 01.07.1961 ஆம் ஆண்டு பனாரஸ்லால் சாவ்லாவுக்கும் சன்யோகிதா தேவிக்கும் மகளாகப் பிறந்தார்.
       தன் ஆரம்பக்கல்வியை தன் சொந்த ஊரான கர்னல் அரசு பள்ளில் முடித்த அவர், 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தி துறையில் இளங்கலைப் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர்,1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.


முதல் விண்வெளிப்பயணம்
       1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொலம்பியா விண்வெளி   ஊர்தியான எஸ்.டி.எஸ் -87 ல் பயணம் செய்து 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து பூமிக்குத் திரும்பினார்.
கொலம்பியா விண்கல நிகழ்வு
       16.01.2003 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் -107ல் விண்வெளிக்குப் புறப்பட்டார். 16 நாள்கள் ஆய்வை முடித்து பூமிக்கு திரும்பும்போது பூமிக்கு மிக அருகில் விண்கலம் வெடித்ததில் உயிரிழந்தார்.
முடிவுரை
       விண்வெளி பயணம் மேற்கொண்ட கல்பனா சாவ்லா அவர்கள் இந்தியாவுக்கு பெருமையைத் தேடித்தந்ததோடு பெண்கள் இனத்திற்கே ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார். அத்தகைய வீரப்பெண்மணியை நாம் போற்றி மகிழ்வோம்!

5. பள்ளி ஆண்டு விழா மலருக்காக நான் நூலகத்தில் படித்த ஒரு கவிதை நூலுக்கு மதிப்புரை
நூலின் தலைப்பு
       மு.மேத்தா எழுதிய கண்ணீர் பூக்கள்
நூலின் மையப்பொருள்
       இன்றைய சூழலில் மனிதனின் ஏக்கங்களும் மனதில் ஏற்படும் தாக்கங்களும் நூலின் மையப்பொருள்களாக அமைந்துள்ளன.
மொழிநடை
       இலக்கண விதிமுறைகளைப் அதிகம் பயன்படுத்தாமல் சாதாரன பாமரனும் படித்து பொருள் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்நூல் அமைந்துள்ளது.
வெளிப்படுத்தும் கருத்து
       இக்கவிதை நூலில் வாழ்வியலின் நடைமுறை உண்மைகள் அப்படியே படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. போரில்லா உலகம், ஆசையைக் குறைத்தல், அனைவரும் சமம், பெண்மையைப் போற்றுதல்,  அன்பு காட்டுதல் முதலிய பலக் கருத்துகள் இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

நூலின் நயம்
       மொனை, எதுகை, இயைபு, முரண், ஆகிய நயங்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
       பங்களா தேசத்துப் பாதையில் நின்றொரு
       பாடகன் பாடுகின்றேன்.”
நூல் கட்டமைப்பு
       இந்நூல் 28 கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு ஆகும். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வியல் எதார்த்தத்தை எடுத்தியம்புகிறது.
சிறப்புகூறு
       இக்கவிதைத் தொகுப்பானது முப்பதாவது பதிப்பாகும். இது முப்பது முறை பதிக்கப்பட்டதைவிட வேரொரு சிறப்பு வேண்டுமா?
நூல் ஆசிரியர்
`      கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூலின் ஆசிரியர் மு.மேத்தா ஆவார்.

No comments:

Post a Comment