v நீங்கள்
செல்லும் இப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம் பகைவரைத் தண்டிக்காமல்
போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று
சொல்லுங்கள்.
v அதன்
பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்கு போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் செல்லலாம்.
v அவர்களும்
உறவினர் போலவே உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக்
கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவார்கள்.
v அங்கே
நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும்
உண்ணுவீர்கள் என்று பரிசில் பெற்ற கூத்தன், பரிசில்
பெறச் செல்லும் கூத்தனை ஆற்று படுத்தினான்.
2.
தமிழன்னையை வாழ்த்துவதற்காக காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?
v அன்னை
மொழியாகவும், அழகாய் அமைந்த செந்தமிழாகவும், பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனியாகவும்,
v கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட
மண்ணுலக பேரரசாகவும், பாண்டிய மன்னனின் மகளாகவும்,
v திருக்குறளின்
பெருமைக்கு உரியவளாகாவும், பத்துப்பாட்டாகவும்,
எட்டுத்தொகையாகவும், பதினெண்கீழ்க்கணக்காகவும், நிலைத்த சிலப்பதிகாரமாகவும், அழகான
மணிமேகலையாகவும் உள்ளதால் தமிழே,
v உன்
பொங்கி எழும் நினைவுகளால் உன்னைத் தலை பணிந்து வாழ்கின்றோம் என்று பாவலரேறு
வாழ்த்துகிறார்.
3.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
v தமிழ்,
இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால்
வளர்க்கப்பட்டது. ஐம்பெரும்
காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.
v கடல்,
முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது .
வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய
மூன்று வகையான சங்குகளைத் தருகிறது. மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி
இருக்கிறது. அலைகளால் சங்கினைத் தடுத்து நிறுத்தி காக்கிறது.
4. முல்லைப் பாட்டில் உள்ள
கார்காலச் செய்திகளை விவரித்து
எழுதுக.
v கார்காலம்
தொடங்கிவிட்டது.
v கடல்
நீரை முகந்துகொண்டு மழைமேகமானது
திருமாலின்
நிறம் கொண்டு,
மாவலி
மன்னன்முன் விண்ணுக்கும் மண்ணுக்குமாகப் பேருருவம் கொண்டதுபோல் வளமாய் எழுந்து,
மலையைச்
சூழ்ந்து,
பெருமழை
பொழிந்தது.
v மாலைப்
பொழுதில் தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரத்தைப் போக்கக் கருதிய முதுப்பெண்கள்,
ஊரின்
புறத்தே சென்று முல்லைப் பூவுடன் நெல்லையும் சேர்த்து தூவி, தெய்வத்தைத் தொழுதனர். தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.
v அப்போது யாரோ ஒரு ஆயமகள், சிறுதாம்பு கயிற்றால் கட்டப்பட்ட, பசியால் வாடிய கன்றின் வருத்தத்தைப் போக்க நினைத்து அதனிடம்
, ”மிகுதியாகப்
புல்லை மேய்ந்த உன் தாய், வளைந்த கத்தியை கையில் உடைய இடையர் ஓட்டி வர, இப்போது வந்துவிடுவாள்.
வருந்தாதே!
” என்று
கூறினாள்.
v அதனை
நற்சொல் எனக் கொண்ட முதுப்பெண்கள் தலையிடம் சென்று, நற்சொல்லைக் கேட்டோம். அதனால் தலைவர் திரும்பி வருவது உறுதி. எனவே, உன் துயரத்தை விட்டுவிடுவாயாக என்று ஆற்றுப்படுத்தினாள்.
5. "மாளாத காதல் நொயாளன் போல்"
என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
Ø உடலில்
ஏற்பட்ட புண்ணை மருத்துவர், கத்தியால் அறுத்துச்
சுட்டடிலும் அது நன்மைக்கே என நோயாளி என நினைத்து அம்மருத்துவரை நேசிப்பது போல,
Ø வித்துவக்கோட்டு
இறைவா நீ எனக்கு நீங்காத துன்பத்தைத் தந்தாலும் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்
என ஆழ்வார் கருதுவதாக இவ்வுவமைச் சுட்டுகிறது.
6. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்?
விளக்கம் தருக.
Ø இடைக்காடர்
பாடிய பாடலைக் குசேல பாண்டியன் அவமதித்தான்.
Ø இடைக்காடர்
கடம்பவனத்து இறைவனிடம் வேண்டி முறையிட்டார்.
Ø இறைவன்
கடம்பவனக் கோவிலைவிட்டு வெளியேறி வையை ஆற்றின் தென்பக்கத்தில் கோவிலை உருவாக்கி,
அங்கே
எழுந்தருளினார்.
Ø இதனை
அறிந்த மன்னன் யான் என்ன குற்றம் செய்தேன் ஏன் இங்கு எழுந்தருளினீர் என வருந்தினான்.
Ø இறைவன்,
இடைக்காடனார்
பாடலை இகழ்ந்த குற்றமே தவிர, வேறு எந்த குற்றமும்
இல்லை என்றார்.
Ø தன்
தவற்றை உணர்ந்த பாண்டிய மன்னன், இடைக்காடனாருக்கு
மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்திச் சிறப்புச்
செய்தான்.
7. நவீன கவிதையில்
வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புற பாடலில்
வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
v நவீன கவிதையில் - பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை
பாடப்பட்டுள்ளது.
v நாட்டுப்புற பாடலில் - மென்மையான மலரை தங்கத் துரட்டியால் எடுப்பதாக பாடப்பட்டுள்ளது.
v
ஒப்பீடு:
இரு பாடல்களிலும் பூக்களை கையாலும் நுட்பம் விளக்கப்பட்டுள்ளது.
8. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
திருவடியில் -
கிண்கிணி சிலம்பு ஆடட்டும்
இடையில் - அரைஞாண் அரைவடம் ஆடட்டும்
தொந்தியுடன் -
சிறுவயிறு ஆடட்டும்
நெற்றியில் - சுட்டி ஆடட்டும்
கொண்டையில் - முத்து ஆடட்டும்
வைத்தியநாதபுரி முருகனே செங்கீரை ஆடி அருள்வாய்
9. நூலோடு - ஆசிரியரை பொருத்தி எழுதுக.
என் கதை - நாமகக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்
வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்
நாற்காலிக்காரர் - ந. முத்துசாமி
10. “முதல்மழை விழுந்ததும்” என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா கவிபாடுகிறார்?
v மண் பதமாகிறது.
v சூரியன் உதித்தது.
v காளைகளை விரைவாக ஓட்டினர்.
v மண்ணை உழுதனர்.
v நாற்று வளர்ந்தது, கொழுவை நாட்டினர்.
11.
செங்கற்கள் அறியாது”
- இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம் : கவிஞர்
நாகூர் ரூமி அவர்கள் எழுதிய சித்தாளு என்னும் கவிதையில் இடம்
பெற்றுள்ளது.
பொருள் : கட்டடங்கள்
உருவாவதற்குக் காரணமான சித்தாளின் மனச் சுமைகளைச்
செங்கற்கள் அறிவதில்லை .
விளக்கம் : பல அடுக்குமாடி கட்டிடங்களை உருவாக்கி
பிறருடைய கனவுகளை
நனவாக்கும் சித்தாளின் சுமைகளைப் பற்றி எவரும் நினைப்பதில்லை.
கற்களைச் சுமந்தால் மட்டுமே அடுத்த வேளை உணவு.
அவர்களின்
மனச்சுமையைச்
செங்கற்களும் அறிவதில்லை மனிதர்களும் அறிவதில்லை என்று நாகூர் ரூமி சித்தாளின் வேதனையைப்
புலப்படுத்துகிறார்.
12. “காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக்
காய்ந்தேன்” உவமை உணர்த்தும் கருத்து
யாது ?
v இளம்
பயிரானது வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே தூயமணி போன்று பெய்கின்ற மழைத்துளி இல்லாமல் வாடிக்
காய்ந்து விட்டது போல கருணையாகிய நானும் என் தாயை இழந்து விடுகின்றேன் .
13. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன்
கூறுகிறார்?
v நான்
உயிர்பிழைக்கும் வழி அறியேன்
v இயங்குதல்
இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்
v உடலுக்கு
வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிவகைகளை அறியேன்
v காட்டில்
செல்வதற்கான வழிகளையும் அறியேன்
14. தேம்பாவணி நூல் குறிப்பு எழுதுக
.
v ஆசிரியர்
– உமறுப்புலவர்.
v தேம்பா
+
அணி
= வாடாத மாலை.
v தேன்
+பா +
அணி
= தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு.
v யோசேப்பினை
(வளன்)
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்.
v இது
3 காண்டங்களையும்
36 படலங்களையும்
3615 பாடல்களையும் கொண்டுள்ளது. பகுதி – III (பிரிவு - 1)
1. உவமை அணி
விளக்கம்
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்படையாக நின்று ஒப்புமைத் தோன்ற வருவது உவமையணி ஆகும்.
சான்று
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு.
பொருத்தம்
இக்குறளில் உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு வெளிப்படையாக நின்று ஒப்புமைத் தோன்ற வருவதால் இது உவமையணி
ஆகும்.
2. எடுத்துக்காட்டு உவமையணி
விளக்கம்
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம
உருபு மறைந்து நின்று ஒப்புமைத் தோன்ற வருவது
எடுத்துக்காட்டு
உவமையணி ஆகும்.
சான்று
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்;
கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
பொருத்தம்
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து, உவம உருபு மறைந்து
நின்று ஒப்புமைத் தோன்ற வருவதால் எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.
3 . தற்குறிப்பேற்ற
அணி
அணி
விளக்கம்
இயல்பாய்
நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் கருத்தை ஏற்றிக்
கூறுவது
தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
சான்று
“போருழந்
தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’
என்பனபோல்
மறித்துக்கை காட்ட”
அணிப்பொருத்தம்:
இப்பாடலில்,
இயல்பாக
நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் கருத்தை ஏற்றிக் கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.
4.
தீவக அணியைச் சான்றுடன் விளக்குக .
விளக்கம்
தீவகம்
– விளக்கு, அறையில் வைக்கப்பட்ட விளக்கு பல இடங்களிலும் வெளிச்சம் தருவது போல் ஓர்
இடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் சென்று பொருள் தருவது தீவக அணி
சான்று
”சேர்ந்தன வேந்தன் திருநெடுங்கண்
தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள் இழிகுருதி
-------------------------------------------------------”
அணிப்
பொருத்தம்
ஓர்
இடத்தில் நின்ற சொல் (‘சேந்தன’ )செய்யுளின் பல இடங்களிலும் சென்று பொருள் தருவதால்
இது தீவக அணி ஆயிற்று.
5. நிரல்நிறை அணியைச் சான்றுடன் விளக்குக
சொல்லையும்
பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வது நிரல்நிறை அணி ஆகும். (நிரல் –
வரிசை,
நிறை - நிறுத்துதல்)
சான்று
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
அணிப்
பொருத்தம்
இக்குறளில்
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்வதால் இது நிரல் நிறை அணி ஆயிற்று.
6. எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
அணி எது அதனைச் சான்றுடன் விளக்குக. அல்லது தன்மை நவிற்சி அணியை விளக்குக.
அணி
வகை
- தன்மையணி
எவ்வகைப்பட்ட
பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்தன்மை அமைய பாடுவது தன்மை
அணியாகும்
சான்று
”மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்
-------------------------------------------------”
அணிப்
பொருத்தம்
எவ்வகைப்பட்ட
பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத்தன்மை அமைய பாடுவதால்
இது தன்மை அணியாகும்.
7.
வஞ்சப்புகழ்சி அணி
விளக்கம்
புகழ்வது
போல பழிப்பதும் பழிப்பது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்சியணி ஆகும்.
சான்று
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
பொருத்தம்
இக்குறள்,
புகழ்வது
போல பழிப்பதால் இஃது வஞ்சப்புகழ்சியணி ஆகும்.
(மெல்லக்
கற்போருக்கு இவ்வாறே பயிற்சி அளிக்கலாம்)
1.
சொற்பொருள் பின்வருநிலையணி (மீண்டும் மீண்டும் வருதல்)
விளக்கம்
சொல்லும் பொருளும் மீண்டும் மீண்டும் வருவது சொற்பொருள்
பின்வருநிலையணி ஆகும்.
சான்று
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
பொருத்தம்
சொல்லும்
பொருளும் மீண்டும் மீண்டும் வருவதால் இஃது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும். (தலைப்பிலேயே விளக்கம் உள்ளது)
(மெல்லக்
கற்போருக்கு இவ்வாறே பயிற்சி அளிக்கலாம்)
2. “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.” – இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின்
வகையைச் சுட்டி விளக்குக.
பயின்று வரும் பொருள்கோள் : ஆற்றுநீர்
பொருள்கோள்
விளக்கம்: பாடலின் தொடக்கம்
முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப்போல நேராகப்பொருள் கொள்ளுமாறு அமைவது
இது
‘ஆற்றுநீர்ப்
பொருள்கோள்’
எனப்படும்.
சான்று : “முயற்சி
திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.”
பொருள்: முயன்றால் பலனுண்டு
முயலவில்லை என்றால் பலனில்லை என பாடலில் வந்த எந்த ஒரு சொல்லும் முன்பின் மாறாமல் பொருள்
கொள்வதால் இது ஆற்றுநீர் பொருள்கோள் எனப்பட்டது.
1. கவிதையைத் தொடர்க
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
மனிதம் வேடிக்கை மட்டும்
பார்க்க பழகி விட்டது
மனிதம் தன்னை அடையாளப்படுத்த
இதைவிடுத்தும் வேண்டுமோ வேறுசூழல்
2.
’கண்ணே கண்ணுறங்கு
காலையில்
நீ எழும்பு
மாமழை
பெய்கையிலே
பாடினேன்
தாலாட்டு
ஆடி
ஆடி ஓந்துறங்கு’ –இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
கண்ணே
கண்ணுறங்கு
-
விளித்தொடர்
காலையில்
நீ எழும்பு - வேற்றுமைத்
தொடர்
மாமழை
பெய்கையிலே - உரிச்சொற்றொடர்
மாம்பூவே
கண்ணுறங்கு - விளித் தொடர்
பாடினேன்
தாலாட்டு - வினைமுற்று
த் தொடர்
ஆடி
ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத்தொடர்
3.
சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
v இன்சொல்
- பண்புத்தொகை - இன்சொல் கேட்டு மகிழ்ந்தேன்
v எழுகதிர்
- வினைத்தொகை
- எழுகதிர்
செந்நிறத்தில் இருந்தது
v கீரி
பாம்பு - உம்மைத்தொகை - கீரி பாம்பு சண்டையிடுவதைக்
கண்டேன்
v பூங்குழல்
வந்தாள்
- அன்மொழித்தொகை
- பூங்குழல்
வந்தாள்
v மலை
வாழ்வார் - வேற்றுமைத்தொகை
மலை
வாழ்வார் இயற்கை உணவை உண்டு வாழ்வார்.
v முத்துப்பல்
- உவமைத்தொகை
நிறைமதி
முத்துப்பல் தெரிய அழகாய் சிரித்தாள்.
4.
’புளியங்கன்று
ஆழமாக நடப்பட்டுள்ளது’.
- இதுப்போல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத்
தொடர்களில் அமைக்க.
கத்தரி
நாற்று சந்தையில் விற்கக் கண்டேன்.
தென்னம்பிள்ளை
வரிசையாக நடப்பட்டுள்ளது.
ஏரிக்கரையில்
நட்ட பனை, மடலியை விரித்து அழகாக
அசைகிறது.
வாழைக்கன்று
நட்டு வைத்தால் நம் வாழ்வும் வளரும்.
நெற்பைங்கூழ் மெல்ல வளர ஆரம்பித்துவிட்டது.
5.
பாரதியின் வசன நடை - சிட்டுக்குருவி
சிறுதானியம்
போன்ற மூக்கு ; சின்ன கண்கள் ; சின்ன தலை; வெள்ளை கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த
வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல்
நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளி
கால்கள்;
இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின்
கைப்பிடியிலே
பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு,
என்
வீட்டில் இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில்
ஒன்று ஆண் ; மற்றொன்று
பெண்.
இதுபோன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும்
ஒன்றைப் பற்றி வசனநடையில் எழுதுக.
மயில்
அழகிய
தோற்றம்; பார்க்க சலிக்காத தோற்றம்; பார்க்கப்பார்க்க வியப்பூட்டும்; அதன் அழகில் அனைவரும் மயங்குவர்;
நீண்ட
ஒலி எழுப்பும்; வண்ணமயமான தோகையை விரித்தாடும்;
பச்சை,
நீலம்,
மஞ்சள்,
கருநீலம்
கலந்த ஒரு அழகிய இயற்கை ஓவியம் போல காட்சியளிக்கும். நம் நெஞ்சங்களுக்கும்
,மகிழ்வளிக்கும் மயிலின் அழகே அழகு!
6. நேற்றிரவு
பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.
வாழைத்
தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது;
தந்தை
என்னிடம், "இலச்சுமி
கூப்பிடுகிறாள், பொய்ப்
பார்" என்றார்.
"இதோ சென்று விட்டேன்"
என்றவாறே
அங்குச் சென்றேன். துள்ளிய
குட்டியைத் தடவிக் கொடுத்து, "என்னடா
விளையாட வேண்டுமா?" என்று
கேட்டு அவனை அவிழ்த்து விட்டேன். என்
தங்கை அங்கே வந்தாள். அவளிடம்,
"நீயும் இவனும் விளையாடுங்கள்"
என்று
கூறினேன். அவிழ்த்து
விடப்பட்ட இலச்சுமித் தொட் டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
– இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
Ø வாழைத்
தோப்பில் -
வாழைத்
தோட்டம் - மரபு வழுவமைதி
Ø குட்டியுடன்
- கன்றுடன் - மரபு
வழுவமைதி
Ø இலச்சுமி
கூப்பிடுகிறாள் - பசு கூப்பிடுகிறது - திணை வழுவமைதி
Ø இதோ
சென்று விட்டேன் - இதோ
செல்கிறேன் - கால வழுவமைதி
Ø துள்ளிய
குட்டியை - துள்ளிய கன்றினை - மரபு வழவமைதி
Ø அவனை
- கன்னை - திணை வழுவமைதி
Ø நீயும்
இவனும் - நீயும் அதுவும் - திணை வழுவமைதி
Ø நீரைக்
குடித்தாள் - நீரைக் குடித்தது - திணை வழுவமைதி
7. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
(சோறு,
கற்றல், கரு,
பூவில், எழுத்து)
1.
நூலின்
பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் கற்றல்
2.
விதைக்குத்
தேவை எரு எனில்,
கதைக்குத்
தேவைகரு
3.
கல்
சிலை ஆகுமெனில்,
நெல்
சோறு ஆகும்.
4.
குரலில்
இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து எழுத்து
5.
மீன்
இருப்பது நீரில்; தேன் இருப்பது பூவில்
8. தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும்
தம்பி.
திறன்பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் தங்கை.
காணோலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும்
தோழன்.
எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி.
இவர்கள் எந்நேரமும் நடப்புலகில்
இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக
இருக்கிறார்கள். இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை
உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப்
பட்டியல் இடுக.
1. குழு மனப்பான்மையை
வளர்க்கும் விளையாட்டுகளை விளையாடச்
செய்வேன்.
1.
மனத்திற்கு இதமான பாடல்களைக் கேட்கச்
செய்வேன்
2.
உறவினர்கள், நண்பர்களுடன்
கலந்து உறவாடச் செய்வேன்.
3.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவேன்.
9. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
1.
கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்
.
அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்
.
2.
மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
பயனுள்ள மரத்தை
வளர்ப்பது நன்மை பயக்கும்
3.
வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக்
கற்றுத் தருகிறது.
- துன்பம் நிறைந்த வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக்
கற்றுத் தருகிறது.
4.
கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
வாழ்க்கைக் கல்வியே
ஒருவருக்கு உயர்வு தரும்
5.
குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.
வீட்டுப் பாடத்தைக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.
10. புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க.
தார்வோன்ற
நிறமுண்டு கரியுமில்லை
பார்
முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை
சேர்ந்து
அமர்ந்து ஒலிப்போம் பள்ளியுமில்லை
சோர்ந்து
போகாமல் வீடமைப்போம் பொறியாளருமில்லை
வீட்டுக்கு
வருமுன்னே.
வருவதைக்
கூறுவேன்
– நான்
யார்?
விடை - காகம்
11.
புயலின் பொது செயல்படுத்த வேண்டிய முக்கிய செயல்கள்
v புயலின்
பொது வெளியில் செல்வதைத் தவிர்ப்போம்.
v தொலைப்பேசி,
தொலைக்காட்சி முதலிய மின்சாதனப் பொருள்களைத்
தொடுவதைத் தவிர்ப்போம்.
v மாடியில்
இருப்பதைத் தவிர்த்துத் தளப் பகுதியில் குடும்பத்துடன் தங்குவோம்.
v காற்றடிப்பது
நின்றாலும் வானொலி மறு அறிவிப்பு வரும்வரை விட்டைவிட்டு வெளியில் வரமாட்டோம்.
v மெழுகுவர்த்தி,
தீப்பெட்டி முதலிய அவசிய பொருள்களையும் உணவு பொருள்களையும் முன்கூட்டியே
வாங்கிவைப்பேன்.
12. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு
தொடர்களை முழுமை செய்க.
1.
நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம்
. நெகிழிப்
பொருள்களை மண்ணுக்கு அடியில்
புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும்
.
2.
காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.
செய்த
தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது.
3.
காற்றின் மெல்லிய தொடுதல்
பூக்கக்களைத் தலையாட்ட வைக்கிறது.
கைகளின்
நேர்த்தியான தொடுத்தல் பூக்கக்களை மாலையாக்குகிறது.
4.
பசுமையான காட்சி
யைக் காணுதல் கண்ணுக்கு
நல்லது.
5.
பொதுவாழ்வில் நடித்தல்
கூடாது. நடிப்பில்
அவரை மிஞ்ச ஆள் கிடையாது.
13. புறத்திணைகளை
(எ.கா) தந்து விளக்குக.
புறத்திணைகள் 12 வகைப்படும். அவையாவன:
v வெட்சி - ஆநிரை கவர்தல்
v கரந்தை - ஆநிரை மீட்டல்
v வஞ்சி - மண்ணாசை கவர்தல்
v காஞ்சி - எதிர்த்து போரிடல்
v நொச்சி - மதில் காத்தல்
v உழிஞை - மதில் வளைத்தல்
14. மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடா;க.
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே
பூச்சியைக் கவரும் வண்ணங்களிலும்
பூக்களிடம் விழுவது மனிதர்களே
பூக்களின் மென்மை மனங்களிளே
பூமாலை சூடி மணம் மகிழும் மணமக்களே
அலகிடுதல்
குறள்
|
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்ப தறிவு.
|
அலகிடுதல்
|
எண்
|
சீர்
|
அசை
|
வாய்பாடு
|
|
1
|
எப்/பொருள்
|
நேர்+நிரை
|
கூவிளம்
|
|
2
|
எத்/தன்/மைத்
|
நேர்+நேர்+நேர்
|
தேமாங்காய்
|
|
3
|
தா/யினும்
|
நேர்+நிரை
|
கூவிளம்
|
|
4
|
அப்/பொருள்
|
நேர்+நிரை
|
கூவிளம்
|
|
5
|
மெய்ப்/பொருள்
|
நேர்+நிரை
|
கூவிளம்
|
|
6
|
காண்/ப
|
நேர்+நேர்
|
தேமா
|
|
7
|
தறி/வு
|
நிரை+நேர்
(நிரைபு)
|
பிறப்பு
|
முடிவு
இக்குறளின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
வெண்பா
பொதுவிலக்கணம்
v அமைவு - ஈற்றடி முச்சீராகவும் ஏனையடி
நாற்சீராகவும் வரும்.
v சீர் - ஆசிரிய உரிச்சீர்
(மாச்சீர்,
விளச்சீர்),
காய்ச்சீர்.
( பிறச்சீர்
கலவாது)
v தளை - இயற்சீர் வெண்டளை,
வெண்சீர்வெண்டளை.
(வேற்றுத்தளை
கலவாது)
v ஓசை - செப்பலோசை
v அடி - அளவடி
(நேரடி)
v அடிவரையறை - இரண்டடி சிறுமை
, பன்னிரண்டடி
பெருமை
v சிறப்பு - ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள்,
மலர்,
காசு,
பிறப்பு
என்ற நான்கனுள் ஏதேனும் ஒன்றில் முடியும்.
ஆசிரியப்பா
பொதுவிலக்கணம்
v அமைவு - ஈற்றயலடி முச்சீராகவும் ஏனையடி
நாற்சீராகவும் வரும்.
v சீர் - ஆசிரிய உரிச்சீர்
(மாச்சீர்,
விளச்சீர்),
காய்ச்சீர்.
v தளை - நேரொன்றாசிரியத்தளை,
நிரையொன்றாசிரியத்தளை
(பிறத்தளைகள் கலந்து வரும்.
ஆனால்,
வஞ்சித்தளைகள்
மட்டும் வாரா)
v ஓசை - அகவலோசை
v அடி - அளவடி
(நேரடி)
v அடிவரையறை-
மூன்றடி
சிறுமை
, பாடுவோனின்
உள்ளக் குறிப்பு பெருமை
v சிறப்பு - ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில்
முடிவது சிறப்பு.
பகுதி – IV
மொழிபெயர்க்க
1.
Respected ladies and gentlemen, I am Ilangovan
studying tenth standard. I have
come here
to say a few words about our Tamil culture . Sangam literature shows that
Tamils were best in vulture and civilization about two thousand years ago.
Tamils who have defined grammar for language have also defined grammar for
life. Tamil culture is rooted in the
life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England
and worldwide. Though our vulture is very old, it has been updated
consistently. We should feel proud about our culture. Thank you one and all.
தமிழர் பண்பாடு
மதிப்பிற்குரிய
சகோதர சகோதரிகளே, என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படித்துவருகிறேன். நான் நமது தமிழ்
பண்பாடு குறித்து ஒரு சில சொற்கள் சொல்ல வருகின்றேன். ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்தவர்கள் என்று
, சங்க இலக்கியம் தெரிவிக்கின்றன. மொழிக்கு இலக்கணத்தை
வரையறுத்த தமிழர்கள், வாழ்க்கையின் இலக்கணத்தையும் வரையறுத்துள்ளனர்.
தமிழ்பண்பாடு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து
என உலகலாவிய நிலையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறையிலும் வேரூன்றி இருக்கிறது.
நமது பண்பாடு மிகவும் பழமையானது. எனினும்,
ஒவ்வொரு நாளும் புதிப்பிக்கப்பட்டு வருகிறது. நமது
பண்பாடு பற்றி நாம் பெருமைப்படுவோம் . அனைவருக்கும் நன்றி.
2.
The golden sun gets
up early in the morning and stars it bright rays to fade away the dark. The milky clouds start their bantering
wandering. The colourful birds start twitting their morning melodies in
percussion. The cute butterflies dance around the flowers. The flowers
fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
இயற்கையுடன் விடியல்
பொன்னிற
சூரியன் அதிகாலையில் தோன்றிய பிரகாசமான கதிர்களைக் கொண்டு உலகை இருளைப் போக்குகிறது.
மேகங்கள் அளையத் தொடங்குகின்றன.
வண்ணமயமான
பறவைகள் தங்கள் காலை இசையால் மகிழ்ச்சி அடைகின்றன . அழகிய
பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனம் ஆடுகின்றன. மலர்களின் வாசனை,
தென்றல்
காற்றை நிரப்புகிறது. காற்று எல்லா இடங்களிலும் வீசி
மகிழ்ச்சியூட்டுகிறது.
3.
If you talk to a man in a language
he understands, that goes to his head. If you talk to him in his own language
that goes to his heart - Nelson Mandela
நீங்கள் ஒரு மொழியில் மனிதரிடம்
பேசினால், அது அவரின் அறிவைச்
சென்றடைவதால் அவர் புரிந்துகொள்வார். நீங்கள் அவருடைய சொந்த மொழியில்
பேசினால், அது அவருடைய இதயத்தைத் தொடும். – நெல்சன் மண்டேலா.
4.
Language is the road map of a
culture. It tells you where its people
come from and where they are going -
Rita Mae Brown
மொழி
என்பது பண்பாட்டின் வழிகாட்டி. அது மக்கள்
எங்கே இருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள்
என்பதைக் கூறும். – ரீட்டா மே பிரவுன்.
5.
Malar: Devi, switch off the lights when you leave the room.
Devi:
Yeah. We have to save electricity.
Malar:
Our nation spends a lot of electricity
for lighting up our streets in the night.
Devi:
Who knows? In future our country may
launch artificial moons to light our
night
time sky!
Malar:
I have read some other countries are
going to launch these types of
illumination
satellites near future.
Devi:
Superb news! If we launch artificial
moons, they can assist in disaster
relief
by beaming light on areas that lost power!
மலர்: தேவி, நீ
அறையை விட்டு வெளியே செல்லும்முன் விளக்கை
அணைத்துவிட்டுச்
செல்
தேவி: ஆம். நாம்
மின்சாரத்தைச் சேமிக்கவேண்டும்.
மலர்: இரவில் நம் வீதிகளை ஒளிரச் செய்வதற்காக,
நாடு
நிறைய மின்சாரத்தைச் செலவிடுகிறது.
தேவி: யாருக்குத் தெரியும்.
எதிர்காலத்தில்
வீதிக்கு வெளிச்சம் தர செயற்கை நிலவையும் நட்சத்திரங்களையும் உருவாக்கலாம்.
மலர்: சில நாடுகள்,
செயற்கை
நிலவையும் நட்சத்திரங்களையும் உருவாக்கப் போவதாக நான் படித்திருக்கிறேன்.
தேவி: மகிழ்ச்சியான செய்தி.
நாமும்
இது போல செயற்கை நிலவை உருவாக்கினால் மின்தடையால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.
6.
Therukoothu is, as its name indicates, a popular form of
theatre performed in the streets. It is performed by rural artists. The stories
are derived from epics like Raamayana, Mahabhartha and other ancient puranas .
There are more songs in the play with dialogues improvised by the aritists on
the spot. Fifteen to twenty atcors with a small orchestra forms a koothu
troupe. Though the orchestra has
singer, the artists sing in their
own voices. Artists dress themselves with heavy costumes and bright
makeup. Koothu is very popular
among rural areas.
கூத்து
தெருக்கூத்து
என்பது தெருக்களில் நடத்தும் கலை நிகழ்ச்சி கிராமப்புற கலைஞர்கள் நடத்துவர். இராமாயணம்
, மகாபாரதம் கதைகள் இடம்பெறும். இருபது
முதல் முப்பது நடிகர்கள் குழுவாக இருப்பர். கிராமப்புறத்தில் சொந்தக் குரலில் பாடுவர். இவை
பிரபலம்.
7.
Among the five geographical divisions of the Tamil
country in Sangam literature, the Marutham region was the fit for cultivation,
as it had the most fertile lands. The properity of a farmer depended on getting
the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among
these elements of nature, sunlight was considered indispensible by the ancient
Tamil.
மருத நிலமும் விவசாயமும்
சங்க காலத்தமிழர் நிலத்தினை ஐவகையாகப் பிரித்தனர்.
அதில்
மருதநிலமானாது விவசாயத்திற்கு ஏற்றததும் வளமானதும் ஆகும். இங்கு விவசாயிகள், விவசாயம்
செய்ய சூரிய ஒளி, பருவ மழை , மண்வளம் ஆகியவற்றை நம்பி இருக்கின்றனர். இயற்கையின்
இக்கூறுகளில் சங்ககாலத் தமிழர், சூரிய ஒளிக்கு முதன்மை கொடுத்தனர்.
8.
Once upon a time there were two
beggars in Rome. The first beggar used to cry in the Street of the city, ‘’He
is helped whom God helps”. The second beggar used to cry, “He is helped who the
king helps”. This was repeater by them everyday. The Emperor of Rome heard it
so often that he decided to help the beggar who popularized him in the streets
of Rome. He ordered a loaf of bread to
be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight
of the bread, he sold it to his friend as soon as he met him . The latter
carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of
gold. Thinking God he stopped begging from that day. But the other continued to
beg through the city. Puzzled by the beggar’s behavior, the Emperor summoned
him to his presence and asked him, “What have you done with the loaf of bread that I had send you lately? “The man
replied, “I sold it to my friend, because it was heavy and did not seem well
baked’’ Then the Emperor said, “Truly he whom God helps is helped Indeed, “and
turned the beggar out of his palace.
முன்பு
ஒரு நாள் ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். முதல் பிச்சைக்காரன்
கடவுள் எப்படியாவது யார் மூலமாவது எனக்கு உதவுவார் என்று கண்ணீர் விட்டான். இரண்டாம்
பிச்சைக்காரன் மன்னனைப் புகழ்ந்து பாடினால் மன்னன் காப்பான் என்றான். தினமும் இருவரும்
இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ரோம் அரசர் தன்னைப் பற்றிப் பேசிப் புகழ்ந்து
எப்படியாவது தான் பாதுகாப்பேன் என்று நம்புகிற பிச்சைக்காரனுக்கு உதவ விரும்பினார்.
நீளமான
ரொட்டிப் பொட்டலத்தில், ரொட்டித் துண்டுகள் நடுவே சில பொற்காசுகளை வைத்து கொடுத்தான்.
இரண்டாம்
பிச்சைக்காரன் ரொட்டித்துண்டு பொட்டலம் கனமாக இருக்கிறது; விற்றால்
பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் பிச்சைக்காரனான நண்பனிடம் விற்று விடுகிறான்.
இப்படியே
ரொட்டித் துண்டை தினமும் விற்கிறான். அதனை
வாங்கும் முதலாம் பிச்சைக்காரன் ரொட்டித் துண்டை வெட்டி பார்த்தால் தினமும்
பொற்காசுகள் மின்னின. தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளை எடுத்து வைத்து
சேர்த்து வைத்தான். பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுகிறான். இரண்டாம் பிச்சைக்காரன்
தொடர்ந்து வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டே இருக்கிறான். மன்னன்
அவனை அழைத்து நான் கொடுத்த ரொட்டிப் பொட்டலங்களை என்ன செய்தாய் என்று கேட்டார்.
அது
எடுத்துச் செல்ல கனமாக இருந்தபடியால் என் பிச்சைக்கார நண்பனிடம் அதனை விற்று விட்டேன்
என்றான்.
மன்னர்
தனக்குள் நினைத்துக் கொண்டார். “கடவுள் தன்னைத் தேடுபவர்களுக்கு உண்மையிலே யார் மூலமாவது
உதவுகிறார்”
இரண்டாம்
பிச்சைக்காரனிடம் திரும்பி, சரி!
நீ
போகலாம் என்று அரண்மனையில் இருந்து வெளியேறச் சொன்னார்.
9.
Education is what remains after one has forgotten what
one has learned in School.
– Albert Einstein
ஒருவன் பள்ளியில்
கற்றவற்றுள் மறந்துவிட்டவைபோக எஞ்சியிருப்பதே கல்வியாகும்.- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
10. Tomorrow
is often the busiest day of the week. – Spanish proverb
வாரத்தின் நாள்களுள்
நாளை என்பதே மிகவும் பரபரப்பான நாள். – ஸ்பானிஷ்
பழமொழி.
11. It is during our darkest moments that we must
focus to see light. – Aristotle
வாழ்வின் மிக
இருண்ட தருணத்தில்தான் நாம் வெளிச்சத்தைக் காணக் கவனம்
செலுத்த வேண்டும். – அரிஸ்டாட்டில்.
12. Success is not final, failure is not fatal. It is the
courage to continue that counts.
- Winston Churchill.
வெற்றி என்பது
இறுதி அன்று. தோல்வி என்பது அழிவு அன்று; தொடர்ந்து
முயலும் துணிவே சிறப்பானது.
– வின்ஸ்டன் சர்ச்சில்.
No comments:
Post a Comment